Home /News /sports /

லக்னோவை வீழ்த்தி முதல் போட்டியிலே வெற்றியைப் பதிவு செய்த குஜராத்

லக்னோவை வீழ்த்தி முதல் போட்டியிலே வெற்றியைப் பதிவு செய்த குஜராத்

குஜராத் வீரர்கள்

குஜராத் வீரர்கள்

லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 4-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இதுதான் முதல் ஐ.பி.எல் போட்டியாகும். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். இருவரையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும், டிகாக் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அவரைத் தொடர்ந்து, லீவிஸ் 10 ரன்களும், மணிஷ் பாண்டே 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் நான்கு பேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை சரிவிலிருந்து மீட்டனர். தீபக் ஹூடா 55 ரன்களும், ஆயுஷ் பதோனி 54 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 158 ரன்கள் எடுத்தது.

    அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஷப்மன் கில், மேத்யூ வேட் களமிறங்கினர். ஷப்மன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கரும் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். லக்னோ அணி 15 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து, மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா இணை நிதானமாக ரன் ரேட்டை அதிகப்படுத்தியது. வேட் 30 ரன்களும், ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதைப்போல, டேவிட் மில்லர் 30 ரன்களும் எடுத்தனர். மறுபுறம் நிதானமாக ஆடிய ராகுல் திவாட்டியா நிதான ஆடி ரன்களைக் குவித்தார். அவருக்கு அபினவ் மனோகர் துணை நின்று ரன்களைச் சேர்த்தார். இறுதி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விரட்டி அசத்தினார் மனோகர். மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்தார் மனோகர்.

    GT vs LSG | குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு... லக்னோ, குஜராத் அணியின் Playxing XI

    அதனையடுத்து, திவாட்டியா ஸ்டிரைக்குக்கு வந்தார். 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் திவாட்டி பவுண்டரி அடித்து குஜராத் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. லக்னோ அணியின் சார்பில் குஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி