முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி அணி: சிறப்பாக பந்துவீசி 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி

பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி அணி: சிறப்பாக பந்துவீசி 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி

குஜராத் வீரர்கள்

குஜராத் வீரர்கள்

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.

  • Last Updated :

ஐ.பி.எல் தொடரின் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட், ஷப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். மேத்யூ வேட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஷப்மன் கில் அதிரடியாக ஆடிவந்தார்.

அடுத்துகளமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, நிதானமாக ஆடினார். அவர், 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய மேத்யூ வேட் 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் முஷ்தபிகூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, டிம் செய்ப்ஃபெர்ட் களமிறங்கினர். டிம் செய்ப்ஃபெர்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிரித்வி ஷா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மன்தீப் சிங்கும் 18 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ரிஷப் பன்ட் அதிரடியாக ஆடினர். ரிஷப் பன்ட், லலித் யாதவ் இணை சீராக ரன்களைக் குவித்தனர். சிறப்பாக ஆடிய லலித் யாதவ் 22 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார்.

ஷப்மன் கில் அதிரடி- 171 ரன்கள் குவித்த குஜராத் அணி

மறுபுறம் அதிரடியாக ஆடிய ரிஷப் பன்ட் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லாகி ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பன்ட்டின் விக்கெட்டைத் தொடர்ந்து ஆட்டம் குஜராத் அணியின் கைக்கு சென்றது. ரோவ்மன் போவெல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம், குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

top videos
    First published:

    Tags: IPL 2022