Home /News /sports /

இந்த அன்பும் ஆதரவும் இந்திய அணியால் எனக்குக் கிடைத்தே- ஹர்திக் பாண்டியா

இந்த அன்பும் ஆதரவும் இந்திய அணியால் எனக்குக் கிடைத்தே- ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா நேற்று ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். முதல் ஐபிஎல்-ஐ வென்ற ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா கேப்டனாக தன் முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தார். இதனையடுத்து எது நடந்தாலும் சரி அடுத்து இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெற்றி பெறுவதுதான் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். தொடர் நாயகனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...

    இதனையடுத்து உற்சாகத்தில் பேசிய ஹர்திக் பாண்டியா, “என்ன நடந்தாலும் கவலையில்லை, அடுத்து இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்வதுதான் இலக்கு. இதற்காக நான் என்னவெல்லாம் பங்களிப்பு செய்யவேண்டுமோ அத்தனை பங்களிப்பையும் செய்வேன். என்னைப் பொறுத்தவரை இலக்கு என்பது சுலபமானதுதான். என் அணி உச்சம் தொட வேண்டும் என்பதே.

    எத்தனை போட்டிகள் ஆடினேன் என்பது முக்கியமல்ல இந்தியாவுக்காக ஆடுவது என்பதே ஒருகனவு அது நினைவாகியுள்ளது. நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிப்பதே. இப்போது இந்த வெற்றி மூலம் எனக்கு கிடைக்கும் அன்பும் ஆதரவும் இந்திய அணி மூலமே எனக்குக் கிட்டியது.இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று தருவதுதான் லட்சியம் என்ன நடந்தாலும் சரி” என்றார் ஹர்திக் பாண்டியா.

    2016 டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது இந்திய அணி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் முகமது ஆமிரின் அபார பந்து வீச்சுக்குப் பிறகே ஹர்திக் பாண்டியாவின் காட்டடி தர்பார் பாகிஸ்தானை அன்று அடிவயிறைக் கலங்கச் செய்ததை மறக்க முடியாது. ஆனால் தோற்றோம். 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தொடக்க சரிவுக்குப் பிறகு ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஒரு மினி நம்பிக்கையைக் கொடுத்தனர், ஆனால் தோனி ரன் அவுட் ஆனதால் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும்போது 4 முறை கோப்பையை வென்றதில் பாண்டியா பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது கேப்டனாக குஜராத்துக்கு அதன் முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்று தந்துள்ளார்.

    “நிச்சயமாக அந்த 4 கோப்பைகளும் சிறப்புதான், இது அதனினும் சிறப்பு ஏனெனில் கேப்டனாக நான் வென்றுள்ளேன். ஐபிஎல் தொடரை வெல்வது ஒரு சிறப்புதான் 5 கோப்பைகளில் நான் வெற்றியின் பக்கம் இருந்திருக்கிறேன் என்பது அதிர்ஷ்டம் தான்” என்றார் ஹர்திக் பாண்டியா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Gujarat Titans, Hardik Pandya, IPL 2022, Rajasthan Royals

    அடுத்த செய்தி