Home /News /sports /

ஷேன் வார்னை நினைத்து கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்

ஷேன் வார்னை நினைத்து கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஷேன் வார்ன் தலைமையில் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றபோது அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை மைதானத்திற்கு அழைத்து நேற்றைய இறுதிப்போட்டியின் போதுகவுரவித்தனர். மேலும், அந்த அணியில் அப்போதைய கேப்டனாக இருந்த ஷேன் வார்னேவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஷேன் வார்ன் தலைமையில் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றபோது அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை மைதானத்திற்கு அழைத்து நேற்றைய இறுதிப்போட்டியின் போதுகவுரவித்தனர். மேலும், அந்த அணியில் அப்போதைய கேப்டனாக இருந்த ஷேன் வார்னேவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    அப்போது ஷேன் வார்ன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ஜாஸ் பட்லர் அவர் நினைவால் கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்த சதங்கள் மற்றும் அரைசதங்கள் என விளாசிய அவர், ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் டேவிட் வார்னரும் இருந்தனர். ஆனால், 849 ரன்கள் விளாசிய பட்லர் வார்னரைக் கடந்து 2ஆம் இடத்துக்கு முன்னேறினார்.

    இந்த முறை கோப்பையை வெல்வதுதான் ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தும் முறை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் நினைத்து இறுதிக்குள் நுழைந்தது, ஆனால் வரிசையாக ஆட்டமிழந்து சென்றனர், அந்த ஆட்டமிழப்புகள் டி20 க்கான ஆட்டமிழப்புகள் அல்ல , அதாவது விரைவு ரன் குவிப்பு எத்தனத்தில் அவுட் ஆவது போல் இருக்கவில்லை அவை.

    இறுதிப்போட்டிக்கு முன்பாக ஜோஸ் பட்லர் பேசும்போது, வார்னர் எங்களை பார்த்துக் கொண்டிருப்பார். எங்களின் ஆட்டத்தை பார்த்து நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.

    இந்த நேரத்தில் அவர் எங்களுடன் இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறும்போது பட்லரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் அணியின் முதல் கேப்டனாக ஷேன் வார்ன் அந்த அணிக்கு முதல் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து சென்றிருந்த ஷேன் வார்ன் அங்கு மாரடைப்பினால் அகால மரணமடைந்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Rajasthan Royals, Shane Warne

    அடுத்த செய்தி