நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியில் இங்கிலாந்து வீரரும் பஞ்சாப் கிங்ஸ் ஆல்ரவுண்டருமான லியாம் லிவிங்ஸ்டன் 117 மீ தூரத்துக்கு ஒரு மிகப்பெரிய சிக்ஸரை அடித்து வியக்க வைத்தார்.
வெற்றி பெற 5 ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில் முஹம்மது ஷமி வீசிய முதல் பந்தை ஒரே விளாசு விளாசினார், பந்து டீப்ஸ்கொயர்லெக் பகுதியில் மைதானத்தைக் கடந்துபோய் விழுந்தது, அது 117 மீ என்று கணக்கிடப்பட்டுள்ளது. முஹம்மது ஷமியே மிரண்டு போனார். லேசாக ஆச்சரியத்துடன் புன்முறுவல் புரிந்தார்.
குஜராத் வீரர் ரஷீத் கான் லிவிங்ஸ்டன் அருகில் வந்து இது என்ன பேட்டா அல்லது வேறு ஏதாவதா என்ற ரீதியில் பார்த்தார். அதே ஓவரிலேயே 28 ரன்களை விளாசி வெற்றி பெறச் செய்தார் லிவிங்ஸ்டன் இதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சிக்ஸ். கிறிஸ் கெய்ல் 2010-ல் 116 மீ சிக்சரை இந்தியாவில் அடித்த பிறகு இதுதான் பெரிய சிக்ஸ்
ஷாகித் அஃப்ரீடி ஒருமுறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரியான் மெக்லாரனை அடித்த சிக்ஸ் 153மீ சென்றதாகக் கூறப்படுகிறது இதுதான் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அந்த தூர அளவு பற்றி முரண்பாடுகள் இருந்தாலும் 10-15 மீ குறைத்தாலும் கூட இதுதான் அதிக தூரம் சென்ற சிக்ஸ் ஆகும். இது 2013-ல் நடந்தது.
அடுத்ததாக பிரெட் லீ, 2005-ல் பிரிஸ்பன் மைதானத்தில் டேரன் போவெல் வீசிய பந்தை விளாசிய பிரெட் லீயின் சிக் 130மீ சென்றது.
இதே லிவிங்ஸ்டனே 2021-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் அதிவேக பவுலர் பாகிஸ்தானின் ராவுஃப் வீச 122 மீ சிக்ஸ் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
மார்டின் கப்தில் 127மீ, கோரி ஆண்டர்சன் 122 மீ, மார்க் வாஹ் 120 மீ, யுவராஜ் சிங் 119 மீ, எம்.எஸ்.தோனி 118 மீ, கிறிஸ் கெய்ல் 116 மீ.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat Titans, IPL 2022, Punjab Kings