குஜராத் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தான் ஏன் சோபிக்க முடியாது என்று தனக்கும் திறமை இருக்கிறது என்று தன்னம்பிக்கைப் பேட்டியளித்துள்ளார்.
சஹா டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர், ஆனால் ரிஷப் பண்ட் என்ற ஒரு புதிய சக்தி உள்ளே நுழைந்து அதகளம் செய்யத் தொடங்கியவுடனும், காயமும் சஹாவின் சகாப்தத்தைக் குறுக்கியது, அவரை ஓய்வு பெறுமாறு திராவிடும் அறிவுரை வழங்கினார், பத்திரிகையாளர் ஒருவர் இவரை பேட்டி கொடுக்குமாறு மிரட்டி 2 ஆண்டுகள் தடை பெற்றதும் நடந்தது.
மன உளைச்சலுடன் தான் இனி டெஸ்ட் போட்டிக்கு வர முடியாது என்பதை உணர்ந்த சஹா டி20 போட்டிகளில் நன்றாகவே தொடக்கத்தில் இறங்கி ஆடி வருகிறார், முதலில் சன் ரைசர்ஸ் அணிக்காக சிலபல நல்ல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடினார், இப்போது குஜராத் டைட்டன்ஸுக்காக நல்ல ஒரு அதிரடி தொடக்கங்களை அளித்து வருகிறார்.
பெரிய பெரிய பெயர்களான ஷுப்மன் கில், பாண்டியாவெல்லாம் திணறும்போது இவர் ஒப்புநோக்குகையில் உண்மையில் பங்களிப்பு செய்து வருகிறார், இவர்தான் டி20-க்கு சரியான வீரர். 30-35 ரன்களை விறுவிறுவென்று எடுக்க வேண்டும், டி20 பேட்டிங் என்பது இவ்வளவுதான், அதை செய்து வருகிறார் சஹா.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் குறைந்த ஓவர் போட்டிகளுக்கான வீரர் அல்ல என்று சிலர் ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே எப்போதும் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்பினேன்.
மகேந்திர சிங் தோனி, ஆண்ட்ரே ரசல் அல்லது கிறிஸ் கெய்ல் போன்றவர்களின் உடலமைப்பு என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னிடம் உள்ள ஆற்றல், எனது அணுகுமுறையுடன் பவர்பிளேயை என்னால் நன்றாக பயன்படுத்த முடியும். அதை தான் நான் செய்து வருகிறேன். " என கூறினார் விருத்திமான் சஹா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat Titans, IPL 2022, MS Dhoni, Wriddhiman Saha