ஐபிஎல் தொடரில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற 24வது லீக் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ஹர்திக் பாண்டியா செய்த ரன் அவுட்டால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 24வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 52 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா 87 ரன்களை விளாசினார். குஜராத் அணியின் இது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே நேரத்தில் அந்த போட்டியில் அவர் செய்த ரன் அவுட்டால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு ரூ. 40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை பாண்டியா ரன் அவுட் செய்தார். அப்போது அவர் பந்தை எறிந்த வேகத்தில் ஒரு ஸ்டம்ப் உடைந்தது. இதனால் வேறு ஸ்டம்ப் மாற்றப்பட்டு பின்னர் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உடைத்த ஸ்டம்பின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஒரு செட் எல்இடி டெக்னாலஜி ஸ்டம்புகளின் விலை சுமார் 35 முதல் 40 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைடெக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்டம்புகள் அவ்வளவு எளிதாக உடைவதில்லை.
இருப்பினும் ஹர்திக் வீசிய துரோ மூலம் ஸ்டம்ப் உடைந்ததால் ஐபிஎல் அமைப்புக்கு பல லட்சம் செலவு ஏற்பட்டுள்ளது. அதனால் என்ன ஸ்லோ ஓவர் ரேட்டில் சிக்காமலா போய் விடுவார் ஹர்திக், அப்போது தீட்டி விடும் இந்த ஐபிஎல் நிர்வாகம்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.