Home /News /sports /

கடவுளின் சித்தம் இருந்தால் உலகின் அதிவேக பந்தை ஒருநாள் வீசுவேன் - 8வது அதிவேக பந்தை தொடர்ந்து வீசி உம்ரன் மாலிக் சாதனை

கடவுளின் சித்தம் இருந்தால் உலகின் அதிவேக பந்தை ஒருநாள் வீசுவேன் - 8வது அதிவேக பந்தை தொடர்ந்து வீசி உம்ரன் மாலிக் சாதனை

ஆட்ட நாயகன் உம்ரன் மாலிக்.

ஆட்ட நாயகன் உம்ரன் மாலிக்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராகுல் திவேத்தியா, ரஷீத் கான் மேஜிக் குஜராத்தை வெற்றி பெறச் செய்தாலும் பந்து வீச்சில் பியூர் மேஜிக்கை நிகழ்த்த குச்சியை உடைத்த 5 விக்கெட் நாயகன் உம்ரன் மாலிக்தான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 8-வது முறையாக "போட்டியின் அதிவேகமான பந்தை" வீசி விருதை தட்டி சென்றுள்ளார்.

    ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அந்த போட்டியில் அதிவேகமான பந்து வீசிய ஒருவருக்கு விருதுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணி வீரர் சாஹாவிற்கு 152.9 கி.மீ வேகத்தில் பந்துவீசி உம்ரான் மாலிக் மீண்டும் இந்த விருதை தட்டி சென்றுள்ளார்.

    ஆட்ட நாயகன் விருதை வாங்கிய உம்ரன் மாலிக் பிறகு கூறியதாவது: “என்னால் முடிந்தவரை வேகமாக பந்துவீச வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. மைதானம் சிறிது சிறிதாக இருப்பதால், ஸ்டம்ப்களில் தங்கி, வேகத்தைக் கலந்து, பந்தை ஸ்டம்புகளுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்தேன்.

    கடவுள் சித்தமிருந்தால், நான் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்துவீச வேண்டும் என்றால், நான் அதை ஒரு நாள் செய்வேன். ஆனால் தற்போது நான் செய்ய விரும்புவது நன்றாக பந்து வீசுவதுதான்.” என்றார் உம்ரன் மாலிக்.

    அதுவும் குறிப்பாக ஹர்திக் பாண்டியாவுக்கு வீசிய பவுன்சர் ஏற்கெனவே காயமடைந்த பாண்டியாவின் வலது தோள்பட்டையைத் தாக்கியது. அதிர்ந்து போனார் ஹர்திக், அடுத்த பந்து பவுண்டரி அடித்தாலும் அதை பவுண்டரி அடிக்க வேண்டும் என்று அவர் ஆடவில்லை மட்டையில் பட்டு தானாகச் சென்றது.

    அடுத்து இன்னொரு பவுன்சரில் பாண்டியா கொடியேற்றி வெளியேறினார். முன்னதாக பியூர் பேஸில் ஷுப்மன் கில்லை வீழ்த்தினார், பிறகு டேவிட் மில்லர், அபினவ் மனோகர், விருத்திமான் சஹா ஆகியோரை பவுல்டு செய்தார்.
    Published by:Muthukumar
    First published:

    அடுத்த செய்தி