• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2022: புதிய அணியைக் குறிவைக்கும் கேரி கர்ஸ்டன், ஆஷிஷ் நெஹ்ரா

IPL 2022: புதிய அணியைக் குறிவைக்கும் கேரி கர்ஸ்டன், ஆஷிஷ் நெஹ்ரா

கேரி கர்ஸ்டன்.

கேரி கர்ஸ்டன்.

2011 உலகக்கோப்பையை இந்தியா 2ம் முறையாக வென்ற போது கேரி கர்ஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளர், நெஹ்ரா இந்திய அணியில் இருந்தவர்.

  • Share this:
    ஐபிஎல் 2022 தொடருக்காக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு புதிய அணிகள் அகமதாபாத் மற்றும் லக்னோ. இதில் லக்னோ அணியின் சஞ்சய் கோயெங்கா என்பவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன், மற்றும் இந்திய முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருடன் பயிற்சிப் பொறுப்புக்காக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    லக்னோ அணியின் உரிமையாளர் குழுமமான ஆர்பிஜிஎஸ் குழுமம் ரூ.7,090 கோடிக்கு அணியை ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில் அணி வீரர்களுகான மெகா ஏலத்துக்கு முன்பாக பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.

    2011 உலகக்கோப்பையை இந்தியா 2ம் முறையாக வென்ற போது கேரி கர்ஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளர், நெஹ்ரா இந்திய அணியில் இருந்தவர். கேரி கர்ஸ்டனை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கும் ஆஷிஷ் நெஹ்ராவை பவுலிங் ஆலோசகராகவும் லக்னோ நியமிக்கலாம் என்று தெரிகிறது. இரு தரப்புகளிடையேயும் முறையான விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

    இது தொடர்பாக கேரி கர்ஸ்டன், ஆஷிஷ் நெஹ்ரா வாயைத் திறக்கவில்லை. ஏனெனில் ரகசியக் காப்பு விதிமுறையின் கீழ் வருவதால் அனைத்தும் முடிந்த பிறகே வெளியில் அறிவிக்க முடியும்.

    கேரி கர்ஸ்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 2018-ல் கோச் ஆக இருந்தார். முதலில் பேட்டிங் கோச் ஆக இருந்து பிறகு தலைமைப் பயிற்சியாளராக உயர்வு பெற்றார். டேனியல் வெட்டோரிக்குப் பதில் கேரி கர்ஸ்டன் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 2011 முதல் 2011 வரை தென் ஆப்பிரிக்கா அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் கேரி கர்ஸ்டன் இருந்தார்.

    ஆஷிஷ் நெஹ்ரா 2017-ல் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். நவம்பர் 1, 2017-ல் அவர் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக டி20 போட்டியில் ஆடினார். இந்தப் போட்டியில் ஆடும்போது தன் சொந்த மண்னான டெல்லியில் அவர் ஆட வாய்ப்புப் பெற்றார், மண்ணின் மைந்தன் தன் மக்கள் முன்னாலேயே பிரியாவிடை பெற்றார்.

    நெஹ்ரா என்றாலே 2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக பேய் மாதிரி வீசினாரே அதுதான் நினைவுக்கு வரும். 6 விக்கெட்டுகளை அவர் என்று எடுத்ததோடு இங்கிலாந்து அவரை நினைத்தாலே அச்சப்படும் அளவுக்கு அந்தப் பந்து வீச்சு அமைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: