Home /News /sports /

விராட் கோலி ‘கோல்டன் டக்’- முன்னாள் சிஎஸ்கே ஸ்டார்களால் ஆர்சிபி வெற்றி

விராட் கோலி ‘கோல்டன் டக்’- முன்னாள் சிஎஸ்கே ஸ்டார்களால் ஆர்சிபி வெற்றி

முன்னாள் சிஎஸ்கே ஸ்டார்கள், நேற்று ஆர்சிபி ஹீரோக்கள்

முன்னாள் சிஎஸ்கே ஸ்டார்கள், நேற்று ஆர்சிபி ஹீரோக்கள்

முன்னாள் சிஎஸ்கே ஸ்டார்களான டுபிளெசிஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ஆர்சிபி ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியது.

    மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 31வது ஆட்டத்தில் ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ் 64 பந்துகளில் 96 ரன்கள் விளாச, கிளென் மேக்ஸ்வ்வெல் 23, ஷாபாஸ் 26 என்று பங்களிப்பு செய்ய தினேஷ் கார்த்திக் பினிஷிங் டச்சில் 13 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 181/6 என்ற ஓரளவு சவாலான இலக்கை எட்ட, தொடர்ந்து ஆடிய ராகுல் தலைமை லக்னோ அணி 163/8 என்று முடிந்தது, முன்னாள் சிஎஸ்கே வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை 25 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

    ஆக, ஆர்சிபி வெற்றி, முன்னாள் சிஎஸ்கே வீரர்களான டுபிளெசிஸ், ஹேசில்வுட்டினால்தான் சாத்தியமானது, சிஎஸ்கே டாடீஸ் ஆர்மி மற்ற டாடிக்களைத் தக்க வைத்து இந்த பார்ம் டாடிக்களை கைவிட்டதை எண்ணி இப்போது வருந்தி என்ன பயன்?

    நல்ல பிட்சில் கோலி ஒன்றுமில்லை என்பது மீண்டும் நிரூபணம், சமீரா வீழ்த்தினார்:

    டி.ஒய் பாட்டீல் பிட்ச் நல்ல பிட்ச் என்பதை துஷ்மந்த சமீராவின் லைவ்லி வேகத்தை வைத்து கணிக்க முடிந்தது, ஆனால் பாவம் உலகின் நம்பர் 1 வீரர் கோலியினால் கணிக்க முடியவில்லை. சமீரா வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் அனுஜ் ராவத், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராகுலின் நல்ல கேட்ச் அது. ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே முன்னாள் சிறந்த வீரர் விராட் கோலி இறங்கினார். ஷார்ட் ஆஃப் லெந்த் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை உடலுக்கு தொலைவாக மட்டையைக் கொண்டு சென்று ஆடினார் பாயிண்டில் ஹூடாவிடம் கேட்ச் ஆக வந்த வேகத்தில் வெளியேறினார் கோலி கோல்டன் டக்.



    கோலி சதம் அடித்து சத மேட்ச்கள் ஆகிவிட்டது, ஆம் நேற்று சதமில்லாமல் அவரது 100வது மேட்ச். சமீராவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு 7/2. டுபிளெசிஸ் அப்போது ஒரு பந்தைக் கூட ஆடியிருக்கவில்லை, இந்த நிலையிலிருந்து நசுக்காமல் விட்டு விட்டார் கே.எல்.ராகுல்.

    கிளென் மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்து 23 ரன்கள் எடுக்க டுபிளெசிஸ் மெதுவே தன் இன்னிங்ஸை கட்டமைக்க ஆர்சிபி பவர் ப்ளே முடிவில் 47/3 என்று இருந்தது. சுயாஷ் பிரபுதேசாயும் டுபிளெசியும் இணைந்து ஸ்கோரை 47/3லிருந்து 79 வரை கொண்டு சென்றனர், பிரபுதேசாய் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார். 7.2 ஓவர்களில் 62/4 என்ற நிலையிலிருந்து டுபிளெசிஸ், ஷாபாஸ் அகமட் (26) இன்னிங்ஸை பில்ட் அப் செய்த் 70 ரன்களை 8 ஓவர்களில் சேர்த்து கூட்டணி அமைத்தனர். டுபிளெசிஸ் 38 பந்துகளில் 43 என்பதிலிருந்து அடுத்த 26 பந்துகளில் 53 ரன்களை விளாசி 11 பவுண்டரி 2 சிக்சருடன் 96 ரன் எடுத்து ஹோல்டரின் பந்தில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் ஒரு கேட்சை விட்டாலும் இந்தக் கேட்சை எடுத்தார். 62/4லிருந்து ஆர்சிபி 181/6 என்று சவாலான இலக்கை நிர்ணயித்தது.

    ஜேசன் ஹோல்டர் அதியற்புதமாக வீசி 4 ஓவர் 25 ரன் 2 விக்கெட் என்று சிக்கனம் காட்டினார். சமீரா 1 விக்கெட்.

    ஹேசில்வுட் அபாரம், தேறாத லக்னோ:

    இது ஒரு டிபிக்கல் டெஸ்ட் மேட்ச் பிட்ச் என்பதைப் புரிந்து கொண்ட ஹேசில்வுட் சரியான லெந்த்தில் பந்தை பிட்ச் செய்தார். குயிண்டன் டி காக் அருமையான ஒரு டெஸ்ட் கிளாஸ் அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். கீப்பர் கார்த்திக் டைவ் அடித்து இடையூறு செய்த போதும் கிளென் மேக்ஸ்வெல் ஷார்ப் கேட்சை எடுத்தார். மணீஷ் பாண்டே ஒரு சொத்தையான புல் ஷாட்டில் அடுத்து ஹேசில்வுட்டிடம் வெளியேறினார்.

    பிறகு 17வது ஓவரில் மீண்டும் வந்த ஹேசில்வுட் 13 ரன்கள் எடுத்து ஆடிவந்த ஆயுஷ் பதோனியை மெதுவான வைடு பந்தில் காலி செய்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஓவராக ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு ஆடி ஹேசில்வுட்டிடம் ஸ்டம்புகளை இழந்தார்.

    ஜேசன் ஹோல்டர் இறங்கி 2 சிக்சர்கள் விளாசி 16 ரன்னில் ஹர்ஷல் படேலிடம் காலியானார். குருணால் பாண்டியா மட்டுமே 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 பந்தில் 42 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார், கே.எல்.ராகுல் 30 ரன்களில் வெளியேறினார். 18 ரன்களில் தோல்வி அடைந்த லக்னோ 163/8 என்று முடிந்தது. ஆட்ட நாயகன் 96 அடித்த டுபிளெசிஸ். இரண்டு சிஎஸ்கே முன்னாள் வீரர்களால் ஆர்சிபி வென்றது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Faf du Plessis, IPL 2022, Lucknow Super Giants, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி