ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022 - தினேஷ் கார்த்திக் வழியில் சுரேஷ் ரெய்னா - புதிய பாத்திரம் ஏற்கிறார்

IPL 2022 - தினேஷ் கார்த்திக் வழியில் சுரேஷ் ரெய்னா - புதிய பாத்திரம் ஏற்கிறார்

suresh Raina

suresh Raina

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஐபிஎல் ஸ்டார் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் ஐபிஎல் போட்டித் தொடருக்காக புதிய பாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  15-வது ஐ.பி.எல் தொடர் அல்லது ஐபிஎல் 2022, 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

  இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரெய்னாவை தக்கவைக்க முன்வரவில்லை. இதனையடுத்து பெரிய தல-யின் ரசிகர்களான பலர் அதிருப்தியடைந்ததோடு சின்ன தலயை எடுக்காத சிஎஸ்கேவை சமூக ஊடகங்களில் திட்டித் தீர்த்தனர், சிலர் தோனி -ரெய்னா ஈகோ கிளாஷ் தான் காரணம் என்று கூறினர்.

  இந்த நிலையில்தான் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

  இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது.

  இதையும் படிங்க: வரலாறு படைத்த ஜூலன் கோஸ்வாமி- ஒருநாள் கிரிக்கெட்டில் சாகச வீராங்கனை

   ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஐ.பி.எல். கிரிக்கெட் வர்ணனைக்கு மீண்டும் திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Suresh Raina