Home /News /sports /

ஐபிஎல் 2022: கோப்பையை வெல்லப்போவது யார்? குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

ஐபிஎல் 2022: கோப்பையை வெல்லப்போவது யார்? குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

image courtesy @BCCI

image courtesy @BCCI

பலமான குஜராத் அணி (Gujarat titans) தனது முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை (IPL trophy) வெல்லுமா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan royals) அணி 2வது முறையாக ட்ராப்பியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இரு அணிகளின் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. பலமான குஜராத் அணி தனது முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வெல்லுமா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது முறையாக ட்ராப்பியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இரு அணிகளின் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மிக நீண்ட தொடராகவே அமைந்தது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு புதிய அணிகளின் வரவு காரணமாக இந்த முறை 10 அணிகள் போட்டியில் பங்கேற்றன. மார்ச் 26ம் தேதி தொடங்கிய ஆட்டம் 2 மாதங்களை கடந்து இன்று இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பின் தங்கிய நிலையில், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.

    இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பலம் பொருந்திய குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்ட 2 ஆட்டங்களிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 10ல் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத அணி பிளே ஆப்பில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    குஜராத்திடம் தோல்வி அடைந்தாலும் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.  குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் பலம் வாய்ந்து உள்ளது. சுப்மான் கில்,  ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா,சஹா முகமது ஷமி, ரஷித்கான், யாஷ் தயாள் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

    இதையும் படிங்க: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இணைந்தார் பிரக்ஞானந்தா


    ராஜஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக ஜோஸ் பட்லர் திகழ்கிறார். 4 சதம், 4 அரைசதம் உள்பட 824 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை தன்வசம் வைத்துள்ள பட்லர் இந்த போட்டியிலும் அதிரடியை நிகழ்த்த கூடும். பந்து வீச்சில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அந்த அணியை வெள்வது கடினம். ஐபிஎல் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சீசனில் ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இதுவரை கோப்பையை கைப்பற்றவில்லை. எனவே இந்த முறை குஜராத்தை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா அல்லது தனது அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று குஜராத் டைட்டன்ஸ் அசத்துமா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Gujarat Titans, IPL 2022, Rajasthan Royals

    அடுத்த செய்தி