Home /News /sports /

பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் தொடங்கிய இறுதிப் போட்டி- டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்

பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் தொடங்கிய இறுதிப் போட்டி- டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்

ஐபிஎல் இறுதிப் போட்டி

ஐபிஎல் இறுதிப் போட்டி

ஐ.பி.எல் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

    நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மிக நீண்ட தொடராகவே அமைந்தது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு புதிய அணிகளின் வரவு காரணமாக இந்த முறை 10 அணிகள் போட்டியில் பங்கேற்றன. மார்ச் 26ம் தேதி தொடங்கிய ஆட்டம் 2 மாதங்களை கடந்து இன்று இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பின் தங்கிய நிலையில், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.

    அதேபோல, பல தொடர்களின் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இரு அணிகளும் வலுவாக உள்ள நிலையில் இன்று இறுதிப் போட்டியை எதிர்கொள்கின்றன. இந்தத் தொடர் முழுவதும் டாஸ் வெல்லும் அணிகள் பந்து வீச்சையே தேர்வு செய்துவந்துள்ளன. இந்தத் தொடரில் பந்து வீசும் அணிக்கு பெரும்பாலும் ஆட்டம் சாதகமாக இருந்துள்ளது.

    15-ம் ஆண்டு ஐ.பி.எல் மற்றும் இறுதிப் போட்டிக் கொண்டாட்டம் ஆகியவற்றைப் பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் இன்றைய போட்டி ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி மற்றும் ரன்வீர் சிங்கின் நடனத்துடன் தொடங்கியது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி