Home /News /sports /

LSG vs KKR-ரிங்கு சிங்கிற்கு லூயிஸ் பிடித்த ஆல்டைம் கிரேட் கேட்ச்: விதியின் மாற்றத்தினால் தேங்கிய சுனில் நரைன் - லக்னோவுக்கு லக்

LSG vs KKR-ரிங்கு சிங்கிற்கு லூயிஸ் பிடித்த ஆல்டைம் கிரேட் கேட்ச்: விதியின் மாற்றத்தினால் தேங்கிய சுனில் நரைன் - லக்னோவுக்கு லக்

ரிங்கு சிங்கிற்கு லூயிஸ் பிடித்த திருப்பு முனை கேட்ச்

ரிங்கு சிங்கிற்கு லூயிஸ் பிடித்த திருப்பு முனை கேட்ச்

ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 66வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு நேற்று செம லக் வெற்றி கிடைத்தது.

    ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 66வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு நேற்று செம லக் வெற்றி கிடைத்தது. குவிண்டன் டி காக் 70 பந்துகளில் 10 பவுண்டரி 10 சிக்சர்களுடன் 140 ரன்கள் விளாசித்தள்ள ராகுல் 68 ரன்கள் எடுத்து இருவரும் நாட் அவுட் ஆக லக்னோ 210 நோ லாஸ் என்று 20 ஓவர்களை விக்கெட்டே விழாமல் முடித்தது.தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 17வது ஓவரில் ரஸல் விக்கெட்டை இழந்த பிறகு தோற்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரிங்கு சிங் 15 பந்துகளில் 40 ரன்களை விளாச சுனில் நரைன் 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த 208 ரன்கள் வரை விரட்டி தோற்றது.

    லக்னோ அணியில் ஸ்டாய்னிஸ் சிக்சர் மழையிலும் மனதைத் தளர விடாமல் வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடைசி பந்தில் உமேஷ் யாதவ்வை பவுல்டு செய்ய சுனில் நரைன் 21 ரன்களில் ஒரு முனையில் தேங்கினார். ஸ்டாய்னிஸ் வீசிய பந்தை ரிங்கு சிங் ஒரு சாத்து சாத்த பந்து மேலே எழும்பியது ஸ்வீப்பர் நிலையிலிருந்து 30 அடி ஓடி வந்த எவின் லூயிஸ் சறுக்கியபடியே இடது புறம் கையை நீட்டி பிடித்த கேட்ச் ஐபிஎல் தொடரின் ஆல் டைம் கிரேட் கேட்ச்.

    இந்த கேட்ச்சினால் எதிர்முனையில் இருந்த சுனில் நரைன் ஸ்ட்ரைக்கர் முனைக்கு பழைய விதிமுறையாக இருந்தால் வந்திருப்பார் கொல்கத்தா வென்றிருக்கும், ஆனால் இப்போது கிராஸ் செய்வது கூடாது என்று விதி மாறிவிட்டதால் சுனில்நரைன் எதிர்முனையிலேயே நிற்க கடைசி பந்தை உமேஷ் யாதவ் சந்திக்க வந்தார், 2 ரன்கள் எடுத்திருந்தால் டை ஆகி சூப்பர் ஓவருக்குச் சென்றிருக்கும், ஆனால் உமேஷ் யாதவ் பவுல்டு ஆக 208 உடன் கொல்கத்தா முடிய லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. கொல்கத்தாவுக்கு லக் ‘நோ’, லக்னோவுக்கு லக் யெஸ்.



    முன்னதாக கொல்கத்தா அணி மோசமான தொடக்கம் கண்டது, வெங்கடேஷ் அய்யர், அபிஜித் தோமர் ஆகியோர் இடது கை வேகப்புயல் மோசின் கான் வேகத்துக்கு இரையாகி வெளியேற 9/2 என்று ஆனது.

    நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் அய்யர் அபாரம்

    9/2 என்ற நிலையில் வழக்கம் போல் இடது கை பேட்டர் நிதிஷ் ராணா , கேப்டன் அய்யர் இணைந்தனர். அப்போதுதான் நிதிஷ் ராணா ஆவேசமாக ஆடினார் ஆவேஷ் கானை ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசி 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள். கவுதம் பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் அய்யர் ஹோல்டரை அதியற்புத ஹூக் ஷாட்டில் ஒரு சிக்ஸ், கிருஷ்ணப்பா கவுதமை ஒரு சிக்ஸ் என்று 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 50 ரன்கள் என்று ஸ்டாய்னிஸிடம் ஆட்டமிழக்கும் போது கொல்கத்தா 131/4 என்று 13.4 ஓவர்களி இருந்தது.

    சாம் பில்லிங்ஸ் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது 15.4 ஓவர்களில் 142/5 என்று ஆனது. ஆந்த்ரே ரசல்தான் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார், ஆனால் அவருக்கு எப்படி வீசுவது என்பதை லக்னோ ஒர்க் அவுட் செய்து விட்டது, ஆவேஷ் கான் அவரை நிலைகுலையச் செய்தார், அதாவது எந்தப் பந்தை எப்படி வீசுவார் என்று கணிக்க முடியாததால் ரஸல் 11 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மோசின் கானிடம் ஆட்டமிழந்தார். ஆனால் அவரைக் கட்டிப்போட்டது ஆவேஷ் கான்.

    15 பந்துகளில் 40 ரன்கள் விளாசி லக்னோவை கதி கலக்கிய ரிங்கு சிங்


    அதன் பிறகுதான் ரிங்கு சிங், சுனில் நரைன் ஆவேசமாக ஆடி ஸ்கோரை அருகில் கொண்டு வந்தனர். 19வது ஓவர் முடிவில் 190/6. கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் இரண்டு பந்துகள் 4,6க்குப் பறந்தன. 3வது பந்தும் யார்க்கர் மிஸ் ஆக சிக்ஸ். 3 பந்துகளில் 5 ரன்களே தேவை. ஸ்டாய்னிஸ் ஒரு பந்தை சரியாக வீச 2 ரன்களை எடுத்தார் ரிங்கு சிங். இப்போது 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை, அப்போதுதான் எவின் லூயிஸ் அந்த நம்ப முடியாத கேட்சை பிடிக்க, நரைன் கிராஸ் செய்ய முடியாமல் விதி தடுக்க, உமேஷ் யாதவ் வந்தார் கடைசி பந்தில் 3 ரன் எடுத்தால் வெற்றி, 2 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர். ஆனால் யார்க்கர் துல்லியமாக விழ ஆஃப் ஸ்டம்ப் பெயர்ந்தது. லக்னோவுக்கு உண்மையில் லக்கி வெற்றி, கொல்கத்தா மீண்டும் ஒரு பெரிய விரட்டலில் மார்ஜினலாக தோற்றது.

    டி காக், ராகுல்-சாதனைகள் பல உடைப்பு:

     

    சாதனை நாயகன் டிகாக்


     

    முன்னதாக உமேஷ் யாதவ் துரதிர்ஷ்டம் டி காக்கிற்கு கேட்ச் விடப்பட்டது, அதன் பிறகு அவர் கொல்கத்தா பவுலர்களை சிதைத்தார், குறிப்பாக அவர் கொல்கத்தாவின் புதிர் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கினார், நரைன் 2 சிக்சர்கள் கொடுத்தார், வருண் சக்ரவர்த்தியை 3 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசினார். அதே போல் ரஸலை 15 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசினார். 36 பந்துகளில் 50 எடுத்த டி காக் அடுத்த 23 பந்துகளில் சதம் கண்டு 59 பந்துகளில் அதிரடி சதம் கண்டார்.

    சதம் அடித்த பிறகு வெறிப்பிடித்தது போல் ஆடினார், ஒரு கட்டத்தில் பார்த்தால் டி காக் 44 பந்துகளில் 60 என்று இருந்தவர் கடைசி 26 பந்துகளில் 80 ரன்கள் விளாசித் தள்ளியுள்ளார். 70 பந்துகளில் 140 நாட் அவுட் 10 பவுண்டரி 10 சிக்ஸ். அவரது சிறந்த டி20 இன்னிங்ஸ். ஐபிஎல் வரலாற்றில்ல் 210 நோ லாஸ் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டது. 4வது முறையாக முதலில் பேட் செய்யும் அணியில் 20 ஒவர்களிலும் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் ஆடியுள்ளனர்.

    கே.எல்.ராகுல் 99 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 34வது அரைசதம் எடுத்தார். இதோடு தொடர்ச்சியாக 500 ரன்களை ஐபிஎல் தொடரில் 5வது சீசனாக எடுத்திருக்கிறார் ராகுல். நூலிழையில் பெற்ற வெற்றியின் நாயகனாக டி காக் தேர்வு செய்யப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, KKR, Lucknow Super Giants

    அடுத்த செய்தி