Home /News /sports /

IPL 2022-தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் - ஃபாப் டு பிளெசிஸ் விருப்பம்

IPL 2022-தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் - ஃபாப் டு பிளெசிஸ் விருப்பம்

தினேஷ் கார்த்திக் ஷாபஸ் அகமது

தினேஷ் கார்த்திக் ஷாபஸ் அகமது

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்டரின் ஆட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், தனது அணி வீரர் தினேஷ் கார்த்திக்கை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும் ...
    மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்டரின் ஆட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், தனது அணி வீரர் தினேஷ் கார்த்திக்கை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.

    முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

    அதன்பின் தினேஷ் கார்த்திக் - ‌ஷபாஸ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்னும் ‌ஷபாஸ் அகமது 26 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது. ஏ.பி.டிவிலியர்சுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து இன்னொரு 360 டிகிரி வீரராக தினேஷ் கார்த்திக் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார்.

    நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் தினேஷ் கார்த்திக் பற்றி கூறுகையில் , " அவர் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்.

    ஒரு கட்டத்தில் வெற்றிக்கு மிக தூரத்தில் இருந்து பின்னர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல களத்தில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் தேவை. அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் " என தெரிவித்தார்.

    ஆட்டத்தை ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் செல்ல சில நல்ல வலுவான மனநிலையுடைய வீரர் வேண்டும். இறுதிவரை அவரது அமைதி, உண்மையில் நம்பமுடியாதது. இது எங்களுக்கு ஒரு பெரிய சொத்தாக உள்ளது, ஏனெனில் முடிவில் அந்த அமைதி எதிர்முனை வீரர்களின் அழுத்தத்தைக் குறைத்து அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வழிவகை செய்கிறது” என்றார் டுபிளெசிஸ்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dinesh Karthik, Faf du Plessis, IPL 2022, RCB

    அடுத்த செய்தி