ஐ.பி.எல் தொடரின் 19-வது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மறுபுறம் சிறப்பாக ஆடிய வார்னர், 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட் பங்குக்கு 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். கடைசியாக களமிறங்கிய ஷ்ரதல் தாகுரும் 11 பந்துகளில் 3 சிக்ஸ்ர்களுடன் 29 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களைக் குவித்தது டெல்லி அணி. அதனையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணிக்கு தொடக்கமே ஏமாற்றமாக அமைந்தது.
14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் அஜிங்கே ரஹானே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 8 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா இணை ஓரளவு ரன்களைக் குவித்தது. 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரானா லலித் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அன்ட்ரூ ரஸல் 24 எடுத்து தாகுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.