ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் வார்னர் இந்திய டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவார் .
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது, 'புஷ்பா' திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி பாடலின் நடன அசைவுகளை மைதானத்தில் செய்து காண்பித்துள்ளார்.ஸ்ரீவள்ளி பாடலுக்கு மைதானத்தில் வார்னர் ஸ்டெப் போட்டார். இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ள வார்னர், ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்காக என நகைச்சுவையுடன் குறிப்பிட்டு உள்ளார்.
ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அங்கும் மைதானத்திலேயே புஷ்பா ஸ்ரீவள்ளி நடன அசைவுகளை செய்து காட்டினார், அங்கும் ரசிகர்கள் அதை நடனமாடிக் கொண்டாடினர்.
இந்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வார்னர் ஆடிய நடன ஸ்டெப் வீடியோ இதோ:
வார்னர் ஐபிஎல் தொடரில் ஆட வந்தபிறகே அவரது பழைய ஆஸ்திரேலிய ஸ்லெட்ஜிங் குணாதிசியங்கள் மறைந்து படு ஜாலி மனிதராகி விட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.