Home /News /sports /

கத்துக்குட்டி ரிஷப் பண்ட் - டிம் டேவிட் கிளீன் அவுட்டை ரிவியூ செய்யாதது பெருந்தவறு

கத்துக்குட்டி ரிஷப் பண்ட் - டிம் டேவிட் கிளீன் அவுட்டை ரிவியூ செய்யாதது பெருந்தவறு

டிம் டேவிட் கிளீன் எட்ஜ்

டிம் டேவிட் கிளீன் எட்ஜ்

டிம் டேவிட் என்ற மலை போன்ற மனிதன் 11 பந்துகளில் 34 ரன்களை விளாசியது மேட்சையே மாற்றியது, ஆனால் அவர் 0-வில் இருந்த போது எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார், களநடுவர் நாட் அவுட் கொடுக்க, ரிஷப் பண்ட் ரிவியூ செய்யத் தவறினார். இது மாபெரும் தவறு என்று பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஐபிஎல் 2022, 69வது போட்டியில் நேற்று வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு நிச்சயம் என்ற நிலையில் சொல்லி வைத்து உதை வாங்கியது டெல்லி கேப்பிடல்ஸ், காரணம் ரிஷப் பண்ட்டின் தொடர் கத்துக்குட்டி கேப்டன்சிதான் காரணம். நேற்று மும்பை வெற்றியில் டிம் டேவிட் என்ற மலை போன்ற மனிதன் 11 பந்துகளில் 34 ரன்களை விளாசியது மேட்சையே மாற்றியது, ஆனால் அவர் 0-வில் இருந்த போது எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார், களநடுவர் நாட் அவுட் கொடுக்க, ரிஷப் பண்ட் ரிவியூ செய்யத் தவறினார். இது மாபெரும் தவறு என்று பேசுபொருளாகியுள்ளது.

159/7 என்று டெல்லி கேப்பிடல்ஸ் ரோவ்மென் போவெலின் அதிரடி மற்றும் ரிஷப் பண்ட்டின் பொறுப்பான 39 ரன்களால் எட்டியது. தொடர்ந்து ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள். டேவால்ட் ப்ரெவிஸ் 3 சிக்சர்களுடன் 33 பந்தில் 37 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 17 பந்தில் 31.

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு தேவை 33 பந்துகளில் 65 ரன்கள். அப்போது அதிரடி மன்னன் டிம் டேவிட் 0 நாட் அவுட். ஷர்துல் தாக்கூரின் முதல் பந்தை அவர் எட்ஜ் செய்ய கேட்ச் ஆனது. களநடுவர் தபன் சர்மாவுக்கு காது கொஞ்சம் வீக், நாட் அவுட் என்றார். உடனே ரிவியூ கேட்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் 2 ரிவியூவும் பாக்கி உள்ளது, இப்போது கேட்காமல் எப்போது கேட்பார் ரிவியூவை?  அன்று நடுவர் நோ-பால் கொடுக்காததற்கு அணியையே திருப்பி அழைத்த ‘மாவீரன்’ ரிஷப் பண்ட்டின் மூளை இப்போது என்ன செய்து கொண்டிருந்தது என்று தெரியவில்லை.

ரிவியூ கேட்கவில்லை, டேவிட் அவுட் என்பது ரிவியூவில் கிளீன் ஆக தெரியவர, எல்லோருக்கும் கடும் ஏமாற்றம், தான் ஒரு கத்துக்குட்டி என்று நிரூபித்து விட்டார் ஒரு விக்கெட் கீப்பருக்கு அது எட்ஜ் என்று தெரியவில்லை என்றால் சுற்றி இருக்கும் பீல்டர்களுக்கு எப்படி தெரியும்? அதன் பிறகு என்ன? எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது. 10 பந்துகள்தான் ஆடினார் டிம் டேவிட், வெங்கலக் கடையில் யானை புகுந்தது என்பார்களே அப்படி ஒரு துவம்சம். 2 பவுண்டரி 4 சிக்ஸ் 34 ரன்கள் மேட்ச் மும்பை பக்கம் மாறியது.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கணினி லக் இண்டெக்ஸ் கூறுவதின் படி இந்த ரிவியூ கேட்காமைதான் டெல்லி வெளியேற்றத்துக்குக் காரணம். ஏனெனில் டிம் டேவிட்டின் 10 பந்து 34 ரன் இல்லையெனில் மற்ற வீரர்கள் இதே 10 பந்தில் 17 ரன்கள்தான் எடுத்திருப்பார்கள் என்கிறது. அதுவும் 5 பந்துகள் மீதமிருக்கையில் மும்பை வென்றிருப்பதைப் பார்க்கும்போது ரிஷப் பண்ட் கத்துக்குட்டித் தனமாகக் கேப்டன்சி செய்ததுதான் பெருந்தவறாகப் போனது.

இதனால் மைனஸ் ரன் ரேட்டில் ஆர்சிபி போன்ற ஒரு அணியாகவே தோற்றமளிக்காத ஒரு அணி பிளே ஆஃப் சென்றுள்ளது, ஆனால் ஆர்சிபியின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, அதாவது குஜராத் முதல் முறை, லக்னோ முதல் முறை, ராஜஸ்தான் ராயல்ஸ் நீண்ட காலத்துக்குப் பிறகு பிளே ஆஃப் நுழைவு, ஆகவே ஆர்சிபி ஐபிஎல் 2022 கோப்பையை வெல்ல நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
Published by:Muthukumar
First published:

Tags: Delhi Capitals, IPL 2022, Mumbai Indians, Rishabh pant

அடுத்த செய்தி