Home /News /sports /

ஐபிஎல்: டெல்லி அணியில் 5 பேருக்குக் கொரோனா - மவுனம் கலைத்த பிசிசிஐ- அடுத்த போட்டி எங்கே?

ஐபிஎல்: டெல்லி அணியில் 5 பேருக்குக் கொரோனா - மவுனம் கலைத்த பிசிசிஐ- அடுத்த போட்டி எங்கே?

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பேட்ரிக் ஃபர்ஹத் - பிசியோதெரபிஸ்ட், சேத்தன் குமார் - ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட் , மிட்செல் மார்ஷ் - வீரர் டாக்டர் அபிஜித் சால்வி - குழு மருத்துவர் மற்றும் ஆகாஷ் மானே – சமூக ஊடக உள்ளடக்க குழு உறுப்பினர் ஆகிய 5 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்ததையடுத்து அடுத்த போட்டிக்காக டெல்லி அணி புனே செல்லவில்லை.

மேலும் படிக்கவும் ...

    இதன் எதிரொலியாக நேற்று புனேக்கு செல்ல இருந்த டெல்லி வீரர்களின் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. தனிமைப்படுத்தும் விதமாக வீரர்கள் அனைவரையும் ஓட்டல் அறையிலேயே தொடர்ந்து இருக்கும்படி ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் வீரர்கள் அறையிலேயே முடங்கினர்.

    இதையடுத்து மார்ஷ் உள்பட டெல்லி அணியினர் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று மாலையில் வெளியானது. இதில் முதல்சோதனையில் மிட்செல் மார்சுக்கு பாதிப்பு இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ வந்தது. ஆனால் 2-வது கட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதியானது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை தங்களது மருத்துவ குழு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறைந்தது 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியது வரும்.

    “COVID நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் 6 மற்றும் 7 ஆம் நாட்களில் பரிசோதனை நடத்தப்படும். இரண்டு சோதனைகளும் எதிர்மறையாக இருந்தால், அவர்கள் அணியுடன் இணையலாம். ஏப்ரல் 16 ஆம் தேதி முதல், முழு டெல்லி கேப்பிட்டல்ஸ் குழுவும் தினசரி RT-PCR சோதனை நடைமுறையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடத்தப்பட்ட 4 வது சுற்று RT-PCR சோதனைகள் எதிர்மறையாக வந்துள்ளன.
    டெல்லி கேபிடல்ஸ் குழு ஏப்ரல் 20 ஆம் தேதி காலை ஆர்டி-பிசிஆர் சோதனையின் மற்றொரு சுற்றுக்கு உட்படுத்தப்படும்."

    இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டம் மும்பைக்கு மாற்றப்பட்டது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona positive, Delhi Capitals, IPL 2022

    அடுத்த செய்தி