Home /News /sports /

அக்ஷர் படேல், லலித் யாதவ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி

அக்ஷர் படேல், லலித் யாதவ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி

டெல்லி வீரர்கள்

டெல்லி வீரர்கள்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 14-வது சீசன் நேற்று ஆரவாரத்துடன் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இன்று மும்பை ப்ராபரௌன் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமறிங்கிய ரோஹித் சர்மாவும், இஷான் கிஷன் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

    ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 8 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 22 ரன்களும், பொல்லார்டு 3 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.

    மறுபுறம் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, டிம் சைய்ஃபெர்ட் களமிறங்கினர். சைய்ஃபெர்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மன்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமலும், ரிஷப் பந்த் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மறுபுறம் சிறப்பாக ஆடிய ப்ரித்வி ஷாவும் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். கிட்டதட்ட ஆட்டம் மும்பையின் கட்டுக்குள் சென்றது.

    அதனைத் தொடர்ந்து, லலித் யாதவ், ஷ்ரதல் தாகுர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷ்ரதல் தாகுர் சிறப்பாக ஆடி 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பசில் தம்பி சிறப்பாக பந்துவீசி அவரை ஆட்டமிழக்கச் செய்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அக்ஷர் படேல் அதிரடியைக் காட்டினார். 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். மறுபுறம் லலித் யாதவ் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி