Home /News /sports /

IPL 2022 DC vs RR- ரிஷப் பண்ட் இப்படீல்லாம் ஆடினா சரி வராது, ரஸல் மாதிரி பொளந்து கட்டுங்க - சாஸ்திரி அட்வைஸ்

IPL 2022 DC vs RR- ரிஷப் பண்ட் இப்படீல்லாம் ஆடினா சரி வராது, ரஸல் மாதிரி பொளந்து கட்டுங்க - சாஸ்திரி அட்வைஸ்

ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்.

ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பரிமளிக்க வேண்டுமெனில் ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தையே மாற்ற வேண்டும், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மேற்கிந்திய ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் போல் வந்தது வரட்டும் என்று அதிரடி ஆட்டம் ஆட வேண்டியதுதான் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பரிமளிக்க வேண்டுமெனில் ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தையே மாற்ற வேண்டும், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மேற்கிந்திய ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் போல் வந்தது வரட்டும் என்று அதிரடி ஆட்டம் ஆட வேண்டியதுதான் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    ரவி சாஸ்திரி ஏன் சிறந்த பயிற்சியாளர் என்றால் இதுதான், மேன் மேனேஜ்மெண்ட் திறமைகள் ஏராளம், வீரர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் போன்றவை மிக மிக முக்கியம். அந்த வகையில்தான் ரிஷப் பண்ட் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மட்டையை அனாயசமாக சுழற்ற வேண்டும் என்கிறார் சாஸ்திரி.

    “ஒரு முறை அந்த உத்வேகத்தை பிடித்து விட்டால் அதை இழக்கக் கூடாது. இந்த டி20 வடிவத்தில் அவர் ஆந்த்ரே ரஸல் வழியைப் பின்பற்ற வேண்டும். பந்து நன்றாகத் தெரிகிறதா, நன்றாக மாட்டுகிறதா.. வேறு எதையும் யோசிக்கக் கூடாது, சாத்த வேண்டியதுதான். பவுலர் யாராக இருந்தாலும் சரி அடிக்க வேண்டிய பந்து என்றால் அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டும்.

    இப்படி ஆடினால், யார் கண்டார்கள், ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னராக அதிகப் போட்டிகளை வென்று கூட கொடுக்கலாம். ஆந்த்ரே ரசல் மனத்தெளிவு மிக்கவர். அவர் மூடில் இருந்தால் சாத்து சாத்தென்று சாத்தி எடுப்பார். அவரை நிறுத்த முடியாது. அவரது யோசனையில் எந்த ஒரு எதிர்மறை விஷயங்களும் நுழைய அனுமதி இல்லை. அடிதான்.

    ரிஷப் பண்ட் உண்மையில் அந்தப் பாணியில் ஆடும் திறமை கொண்டவர்தான். அவர் அந்த வழியில் சிந்தித்தால் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டிடமிருந்து சில ஸ்பெஷல் இன்னிங்ஸ்கள் வரும் “ என்றார் ரவி சாஸ்திரி.

    டேனியல் வெட்டோரியும் ரிஷப் பண்ட் பற்றி அதுதான் கூறுகிறார்: “ரிஷப் பண்ட் அலட்சியமாக எதைப்பற்றியும் கவலையில்லாமல் ஆடும்போது அபாயகரமான வீரர்” என்றார்.

    ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸின் 7 சேசிங்கில் 5 இல் தோற்றதில் 29பந்து 43, 17 பந்து 34, 24 பந்து 44, 30 பந்தில் 44, 11 பந்தி 21 என்று அடித்துள்ளார், ஆனால் பாவம் வெற்றியைப் பெற வைக்க முடியவில்லை. குஜராத் டைட்டன்ஸுடன் 172 ரன் இலக்கை பண்ட் அவுட் ஆன பிறகு டெல்லி 14 ரன்களில் இழந்தது, அதே போல் லக்னோவின் 196 ரன்கள் இலக்கை விரட்டும் போது 43 பந்தில் 76 ரன்கள் என்று டெல்லி எடுக்கலாம் என்ற நிலையில் ரிஷப் பண்ட் அவுட் ஆனார், டெல்லி 6 ரன்களில் தோற்றது. இதுதான் பிரச்சனை அவர் ரஸல் பாணியில் ஆடினால் தடையற்ற சுதந்திரத்துடன் ஆடினால் அவரை சுலபத்தில் நிறுத்த முடியாது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Delhi Capitals, IPL 2022, Rajasthan Royals, Rishabh pant

    அடுத்த செய்தி