Home /News /sports /

கொரோனா குவாரண்டைன் போது மேட்ச்களைப் பார்த்து டிவி ரிமோட்டை உடைத்த ரிக்கி பாண்டிங்

கொரோனா குவாரண்டைன் போது மேட்ச்களைப் பார்த்து டிவி ரிமோட்டை உடைத்த ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

டெல்லி அணியில் சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையால் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதையடுத்து, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இந்நிலையில் இந்தத் தனிமை ஒரு கொடுமை என்று ரிக்கி பாண்டிங் வெறுப்பேற்றுவதாக இருந்ததாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...

    அதுவும் டெல்லி அணி ஆடும்போது அணி வீரர்கள் பகக்த்தில் இருந்து ஆலோசனைகளைக் கூற முடியாமல் ஹோட்டல் அறையில் தனிமையில் இருந்த போது வெறுப்புடன் இருந்ததாக பாண்டிங் தெரிவித்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸிடம் கடைசி ஓவரில் த்ரில்லரை தொலைக்காட்சியில் பார்த்தபோது தனக்கு இருப்பு கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். அணியினருக்கு தேவையான அறிவுரைகளை வழங்க முடியாமல் இருந்த அந்த நேரம் ஒரு விரக்தியான அனுபவம் எனத் தெரிவித்துள்ளார். ஹோட்டல் அறையில் அன்று மட்டும் 2 தொலைக்காட்சி ரிமோட்களை உடைத்ததாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பாண்டிங் கூறியதாவது:

    கொரோனா தனிமைப்படுத்துதலில் இருந்து திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லி அணியை பிரிந்து இருந்த நாட்களில் விரக்தியான மனநிலையுடன் இருந்தேன். ஹோட்டல் அறையில் சுமார் 3- 4 ரிமோட்களை உடைத்துவிட்டேன். நீங்கள் ஒரு பயிற்சியாளராக இருக்கும்போது, அணியினருக்கு ​​​​​​​இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என மெசேஜ்களை மட்டும் அனுப்புவது என்பது வெறுப்பாக இருந்தது.

    டெல்லி அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை மிகச் சிறப்பாக தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய அந்த அணி, அடுத்த சில போட்டிகளில் நன்றாக விளையாடி மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பியது. இதேபோல் கடந்த ஆண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினாலும், பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தகுதி பெறமுடியவில்லை. "36 அல்லது 37 ஓவர்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம். மூன்று அல்லது நான்கு ஓவர்களில் தான் வெற்றியை தவற விடுகிறோம். அந்த தவறுகளை இனி செய்ய மாட்டோம். மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்" என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Delhi Capitals, IPL 2022

    அடுத்த செய்தி