டெல்லி கேபிடல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சனுடன் டேவிட் வார்னர் செல்பிக்களை கிளிக் செய்தார். 2021 வரை சன் ரைசர்ஸ் அணி உடன் இருந்த வார்னர், டெல்லி கேப்பிடல்ஸ்காக, தனது முன்னாள் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்தார். இது டெல்லி கேப்பிடல்ஸ் சன் ரைசர்ஸை வீழ்த்த பெரிதும் பங்களிப்பு செய்தது.
தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய சன் ரைசர்ஸைக் கொல்வதற்காகக் காத்திருந்தவர் போல் ஆடினார் வார்னர், அதோடு இல்லாமல் தான் சதமெடுக்காவிட்டாலும் பரவாயில்லை எதிர் முனையில் இருக்கும் போவெலையும் தட்டிக் கொடுத்து, ‘அடிச்சுப் பழகிக்கடா’ன்னு ஹைதராபாத்தை அசிங்கப்படுத்தி விட்டார் வார்னர். ஆனால் இதெல்லாம் களத்தில்தான். நிர்வாகத்துடன் தான் மோதலே தவிர சக வீரர்களிடம் இல்லை, நட்பு நட்புதான் என்பதை நிரூபித்தார் டேவிட் வார்னர்.
டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், இதில் ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரத்திற்கு எதிரான போட்டி எனக் கூறப்பட்டது. நிர்வாகத்திற்கு எதிராக சில மனக்கசப்புகள் இருந்தபோதிலும், வார்னர் தனது பழைய சக வீரர்களின் சகவாசத்தை அனுபவித்து மகிழ்ந்தார், மேலும் கேன் வில்லியம்சனை ஆட்டத்திற்கு முன் நட்புடன் தழுவினார்.
ஆட்டம் முடிந்தவுடன் பேசிய வார்னர், “எனக்கு கூடுதல் உத்வேகம் தேவையில்லை. கடந்த தொடரில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். எனவே வெற்றி பெற்றது மிக முக்கியம், பிட்ச் நைஸ் பிட்ச். முதலில் பேட் செய்தாலும் 2வதாக பேட் செய்தாலும் அது ஒன்றுபோலவேதான் செயல்பட்டது. பந்தைப் பார் அடி என்ற அணுகுமுறை இந்தப் பிட்சில் சரி.
எனக்கு வயதாகி வருகிறது, அதனால்தான் ரோவ்மென் போவெலை கடைசியில் அடிக்கச் சொன்னேன், அவாரிடம் சீரியஸான பவர் இருக்கிறது. அவர் அடிப்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன், என்ன பவர். எவ்வளவு தூரம் போகிறது பந்து. ” என்றார் வார்னர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.