ஜோஸ் பட்லர் போல ஏன் நீ சிக்ஸ் அடிக்க மாட்டேங்கற, செஞ்சுரி போட மாட்டேங்கற- வார்னரை துளைத்து எடுக்கும் மகள்கள்
ஜோஸ் பட்லர் போல ஏன் நீ சிக்ஸ் அடிக்க மாட்டேங்கற, செஞ்சுரி போட மாட்டேங்கற- வார்னரை துளைத்து எடுக்கும் மகள்கள்
வார்னர் குடும்பம்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிரமாதமாக ஆடி வரும் தொடக்க வீரரில் முதன்மையானவர் ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தமானவர் இங்கிலாந்தின் தொடக்க வீரரும் ராஜஸ்தான் வீரருமான ஜோஸ் பட்லர்தான். சதங்கள் அவருக்கு கைவந்த கலையாக இருக்கின்றன, இந்நிலையில் வார்னரின் மகள்கள் வார்னரிடம் ஏன் அவரால் பட்லர் போல் ஆட முடியவில்லை என்று கேள்வி கேட்டுத் துளைத்து எடுக்கிறார்களாம்.

ஜோஸ் பட்லர் சதம் அடித்த ஆட்டங்களை தனது 3 மகள்களும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்ததாக டேவிட் வார்னர் தெரிவித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி பந்தாடியது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், “பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை அருமையாக செய்தார்கள்.
இதனால் எங்களது வேலை எளிதாகிவிட்டது. பந்து வீச்சாளர்களுக்கே எல்லா பெருமையும் சேரும். ஜோஸ் பட்லர் போல் என்னால் ஏன் சதம் அடிக்க முடியவில்லை? என்பதை அறிந்து கொள்ள எனது குழந்தைகள் விரும்புகிறார்கள். ஆனால் இது எளிதான விஷயமல்ல. தற்போதைய நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 60 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது.
ஜோஸ் பட்லர் சதம் அடித்த ஆட்டங்களை எனது 3 மகள்களும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். அதன் பிறகு அவரை போல் மைதானத்துக்கு வெளியே போகுமாறு மெகா சிக்சர் அடிக்காதது ஏன்? என்று என்னிடம் தொடர்ந்து கேள்வி கணைகளை தொடுக்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டத்தை எனது மகள்கள் பார்ப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது’ என்றார் வார்னர்.
அன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை வார்னரும், பிரிதிவி ஷாவும் புரட்டி எடுத்தனர், 15ம் வாய்ப்பாடு பாடம் எடுத்தனர். ரபாடாவை வெளுத்து வாங்கி விட்டார் வார்னர், பிரிதிவி ஷா தன் பங்குக்கு மைதானம் நெடுக பந்துகளை சிதறடித்தார். டெல்லியிடம் பஞ்சாப் அன்று மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.