ஐபிஎல் 2022 நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோற்றதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. இதனால்தான் டெல்லி அணி வெற்றி பெற முடிந்தது, சஞ்சு சாம்சன் செய்த இமாலயத்தவறு மற்றும் பீல்டிங்கில் பட்லர் செய்த மிகப்பெரிய தவறு ஆகிய இரண்டு பெருந்தவறுகள்தான் டெல்லி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்று கூற முடியும்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 160 ரன்களையே எடுக்க முடிந்தது. அதுவும் அஸ்வின் அடித்த அரைசதத்தினால் என்பது வேறு விஷயம், தேவ்தத் படிக்கல்லும் அதிரடி இன்னிங்சில் பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார், இதனால் ஓரளவுக்கு போட்டியில் ஃபைட் செய்வதற்கான ஒரு இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான்.
ஆனால் இலக்கை டெல்லி விரட்டும்போது, ட்ரெண்ட் போல்ட் பரத்தை வீழ்த்த, பிரசித் கிருஷ்ணா அபாரமாக 2வது ஓவரை மெய்டனாக வீசினார். அதுவும் மிட்செல் மார்ஷுக்கு மெய்டன் ஓவர். 3வது ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார், மிட்செல் மார்ஷ் ஸ்ட்ரைக்கில். 3வது பந்து அருமையான இன்ஸ்விங்கிங் யார்க்கர்.
பந்து லேட் ஸ்விங் ஆனது. பந்து மார்ஷின் காலணியை முதலில் தாக்கியது பிறகுதான் மட்டையில் பட்டது. ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ரிவியூ பற்றி யோசித்து கடைசியில் கேட்காமல் விட்டார் இது ஒரு இமாலயத் தவறானது. ஏனெனில் ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்பைப் பதம் பார்த்தது. அருமையான வாய்ப்பு மிட்செல் மார்ஷ் அப்போது 1 ரன்னில் இருந்தார். மிகப்பெரிய தவறினால் அவர் மேட்சையே முடித்து விட்டார். களநடுவர் எப்படி அவுட் தராமல் விட்டார் என்பது ஆச்சரியம்.
பிறகு 9வது ஓவரில் வார்னர் 13 ரன்களில் இருந்த போது ஜாஸ் பட்லர் கேட்சை விட்டார். அவர் லெவலுக்கு அந்தக் கேட்சை விட்டிருக்கக் கூடாது, 2 ரன்களானது அது, பிறகு அதே ஓவரில் மாபெரும் அதிர்ஷ்டம் வார்னருக்குக் காத்திருந்தது. 22 ரன்களில் இருந்த போது செஹல் பந்து ஒன்று ஸ்டம்பை தட்டிச் சென்றது, லைட் எரிந்தது, ஆனால் பைல்கள் கீழே விழவில்லை. பயங்கர அதிர்ஷ்டம். இதற்கு முன்னால் ஒரு சிக்ஸ் லாங் ஆஃபில் வார்னருக்கு பீல்டர் எல்லைக் கோட்டருகே நின்றிருந்தால் கேட்ச் எடுத்திருக்கலாம், ஆனால் அவர் கொஞ்சம் முன்னால் வந்து விட்டதால் அவர் தலைக்கு மேல் சிக்ஸ் சென்றது.
ஆகவே மார்ஷ் 1 ரன்னில் இருந்த போது ரிவியூ செய்யாமல் விட்டது, வார்னருக்கு பட்லர் விட்ட கேட்ச், வார்னர் பவுல்டு ஆகியும் பைல்கள் கீழே விழாதது ஆகியவற்றால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi Capitals, IPL 2022, Rajasthan Royals