முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022  DC vs PBKS- பழைய "ஃபார்முக்கு” வந்த பஞ்சாப்- இதுதாண்டா சேசிங்- பஞ்சாபை கிழித்துத் தொங்க விட்ட டெல்லி

IPL 2022  DC vs PBKS- பழைய "ஃபார்முக்கு” வந்த பஞ்சாப்- இதுதாண்டா சேசிங்- பஞ்சாபை கிழித்துத் தொங்க விட்ட டெல்லி

வார்னர்

வார்னர்

பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 32வது போட்டியில் பஞ்சாப் அணியை அதன் பழைய பார்முக்குக் கொண்டு வந்த டெல்லி 115 ரன்களுக்குச் சுருட்டியது, பிறகு இலக்கை விரட்டிய போது வார்னர், பிரிதிவி ஷா 15ம் வாய்ப்பாடு சொல்லி அடித்தனர். ரபாடா, வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை கடைசியில் 10.3 ஓவர்களில் 119/1 என்று பஞ்சாபை கிழித்து தொங்க விட்டது டெல்லி கேப்பிடல்ஸ்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 32வது போட்டியில் பஞ்சாப் அணியை அதன் பழைய பார்முக்குக் கொண்டு வந்த டெல்லி 115 ரன்களுக்குச் சுருட்டியது, பிறகு இலக்கை விரட்டிய போது வார்னர், பிரிதிவி ஷா 15ம் வாய்ப்பாடு சொல்லி அடித்தனர். ரபாடா, வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை கடைசியில் 10.3 ஓவர்களில் 119/1 என்று பஞ்சாபை கிழித்து தொங்க விட்டது டெல்லி கேப்பிடல்ஸ்.

பஞ்சாப் கிங்ஸ் முந்தைய ஐபிஎல் வடிவங்களில் இப்படித்தான் ஆடும், அந்த பார்முக்கு மீண்டும் டெல்லி அவர்களை கொண்டு வந்து விட்டனர். பனுகா ராஜபக்ச என்ற இலங்கை வீரர் பிரமாதமாக ஆடிவந்தார், அவரை திடீரென உட்கார வைத்து விட்டனர், இதனால் பேட்டிங் வலுவிழந்து போனது.

பவுலிங்கில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது மற்றும் பேட்டிங்கில் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கினால் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அக்சர் படேல் நான்கு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கலீல் அகமது, குல்தீப் யாதவ் மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பதிலுக்கு, பிரித்வி ஷா 21 பந்தில் 41 ரன்களையும், வார்னர் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்களையும் விளாசினார். இதனால் டெல்லி அணி 57 பந்துகள் மீதம் வைத்து பெரிய வெற்றியைப் பெற்று நெட் ரன் ரேட்டை எகிறச் செய்துள்ளது.

கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸின் பாராட்டுக்குரிய முயற்சி இது. ஆட்டத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டிம் சீஃபர்ட் என்ற வீரருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதனால் போட்டி கேன்சல் என்று பேசப்பட்டது. இருப்பினும், திட்டமிட்டபடி ஆட்டம் மீண்டும் தொடங்கியது இதில் டெல்லி கேப்பிடல்ஸ் பஞ்சாபை ஒன்றுமில்லாமல் செய்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்த உடனேயே பஞ்சாப் கிங்ஸ் திணறியது. ஷிகர் தவான் மலிவாக வீழ்ந்தார், மயங்க் அகர்வால் ஏமாற்றினார், அவரது மிகவும் ஆபத்தான பேட்டர் லியாம் லிவிங்ஸ்டோன் தோல்வியடைந்தார் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் தனது மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

ஜிதேஷ் ஷர்மா பஞ்சாப் கிங்ஸை இக்கட்டிலிருந்து மீட்க முயன்றார் ஆனால் அக்சர் படேல் அவரை 32 ரன்களில் எல்.பி. செய்தார். 14வது ஓவரில் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதே நேரத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் ஷாருக் கானை வெளியேற்றினார். டெல்லி 115 ரன்களுக்குச் சுருண்டது. கலீல் அகமட், லலித் யாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தங்களது 14 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளுடன் 8 பஞ்சாப் விக்கெட்டுகளை கைப்பற்றியதுதான் பஞ்சாபின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

பிரிதிவி ஷா, டேவிட் வார்னர் 15ம் வாய்ப்பாடு:

116 ரன்கள் இலக்கு என்றவுடனேயே பிரிதிவி ஷா, வார்னர் நோ-லாசில் முடிக்கும் எண்ணத்துடன், பவர் ப்ளேவிலேயே இலக்கை முடித்து விரட்ட வேண்டும் என்று ஆடியது போல் தெரிந்தது. ஆனால் பவர் ப்ளேயில் 81/0 என்று பெரிய எண்ணிக்கையை எட்டினாலும் வெற்றிக்கு அருகில்தான் வர முடிந்தது. இன்ஸ்விங் பவுலர் வைபவ் அரோராவை பிரிதிவி ஷா புரட்டி எடுக்க அவர் 2 ஓவர்களில் 31 ரன்களை கொடுத்தார், ரபாடாவை வார்னர் போட்டு சாத்தி எடுத்து விட்டார்.

ரபாடா 2 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசியில் 3 ஓவர் 35 ரன் என்று முடிந்தார் இதில் 5 பவுண்டரி ஒரு அபார சிக்ஸ்ரையும் வார்னர் விளாசித்தள்ளினார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ் தீப் சிங் ஒரே ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டார்.

பிரிதிவி ஷா கடைசியில் பிரமாதமாக வீசிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிசிடம் 41 ரன்களில் வீழ்ந்தார், இதில் 7 பவுண்டரி 1 சிக்ஸ் அடங்கும். வார்னர் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 30 பந்தில் 60 எடுத்து நாட் அவுட். சர்பராஸ் கான் 12 நாட் அவுட். ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ். டெல்லி கேப்பிடல்ஸ் 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6ம் இடத்தில் உள்ளது.

First published:

Tags: David Warner, Delhi Capitals, IPL 2022, Prithvi Shaw, Punjab Kings