Home /News /sports /

தினேஷ் கார்த்திக்கும், மோர்கனும் குல்தீப் யாதவ்வை ஒழித்தார்கள்- மொகமட் கைஃப் கடும் சாடல்

தினேஷ் கார்த்திக்கும், மோர்கனும் குல்தீப் யாதவ்வை ஒழித்தார்கள்- மொகமட் கைஃப் கடும் சாடல்

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

கொல்கத்தா அணியின் கேப்டன்களாக மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் இருந்தபோது குல்தீப் யாதவ்வை ஒழித்துக் கட்டினார்கள், அவரை வீட்டிலேயே உட்கார வைத்தனர், ஸ்குவாடிலேயே அவரை சேர்க்கவில்லை, இது அவரிடம் நிறைய தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டது என்று முன்னாள் இந்திய வீரர் மொகமட் கைஃப் சாடியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2022 இல் குல்தீப் யாதவ் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது மறுபிரவேசத்தில் முன்னாள் இந்திய பேட்ஸ்மேனும் கிரிக்கெட் நிபுணருமான முகமது கைஃப்பை உற்சாகப்படுத்தினார்.

முகமது கைஃபின் கூற்றுப்படி, குல்தீப் யாதவ் கவனிக்கப்பட வேண்டியவர், ஏனெனில் அவர் தொடர்ந்து பயன்படுத்தப்படாதபோது அவரது நம்பிக்கை குறைகிறது. தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது, இதுதான் இந்திய அணியிலும் அவரது ஆட்டத்தை சோடை போகச் செய்தது என்கிறார் கைஃப்.

இந்நிலையில், மொகமட் கைஃப் நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, “குல்தீப் யாதவ் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இருப்பினும், அவர் நன்கு கவனிக்கப்பட வேண்டிய ஒருவர். அவர் உணர்ச்சிவசப்படும் டைப், அவர் பந்துவீச்சைப் பெறாவிட்டால் அல்லது அணியில் இருந்து நீக்கப்பட்டால், அவர் கடும் ஏமாற்றமடைவார்.

"தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் கேப்டனாக இருந்தபோது, ​​KKR-இல் உள்ள அணியில் கூட குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. அவரை வீட்டில் உட்காரச் சொன்னார்கள். நீங்கள் இப்படிச் செயல்படும்போது எந்த மேட்ச்-வின்னரும் கடுமையான தாழ்வு மனப்பான்மையை அடைவார்கள்” என்றார் மொகமட் கைஃப்.

வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் அடங்கிய அணியில் இடம்பிடிக்க போராடிய குல்தீப் யாதவ், கடந்த இரண்டு சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெஞ்சுகளை சூடுபடுத்துவதில் அதிருப்தி அடைந்தார். KKR க்காக, அவர் 2021 இல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, 2020 மற்றும் 2019 இல் 14 மட்டுமே ஆடினார்.
First published:

Tags: IPL 2022, Kuldeep Yadav

அடுத்த செய்தி