முகப்பு /செய்தி /விளையாட்டு / விராட் கோலி வழியில் செல்கிறாரா? ஸ்ரேயஸ் அய்யருக்கு டிம் சவுதி குட்டு

விராட் கோலி வழியில் செல்கிறாரா? ஸ்ரேயஸ் அய்யருக்கு டிம் சவுதி குட்டு

ஸ்ரேயஸ் அய்யர்

ஸ்ரேயஸ் அய்யர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) நான்கு வெவ்வேறு தொடக்க சேர்க்கைகளைப் பயன்படுத்தி 5 தோல்விகளை வரிசையாக அடைந்து புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) நான்கு வெவ்வேறு தொடக்க சேர்க்கைகளைப் பயன்படுத்தி 5 தோல்விகளை வரிசையாக அடைந்து புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

வியாழன் அன்று, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரிஷப் பந்தின் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை தோற்கடித்த பிறகு, டி20 தொடரில் ஐந்தாவது போட்டியில் தோற்றனர். இதற்கு ஸ்ரேயஸ் அய்யரின் கேப்டன்சிதான் காரணம், தொடக்க வீரர்களை மாற்றுவதும் தூக்குவதும் சரியாக வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விராட் கோலி இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற போது இப்படித்தான் வீரர்களை போட்டிக்குப் போட்டி மாற்றுவதும் தூக்குவதும் செய்து பல வீரர்களின் கரியரே காலியாகி விட்டது. மணீஷ் பாண்டே, கருண் நாயர், குல்தீப் யாதவ், அஸ்வின், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என்று இந்தப் பட்டியல் நீளூம். ஸ்ரேயஸ் அய்யரும் அதே பாணியைக் கடைப்பிடிக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் கொல்கத்தா அணி தனது முதல் ஐந்து போட்டிகளில் அஜிங்க்யா ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாகப் பயன்படுத்தியது. ஆனால் அவர்களின் கடைசி நான்கு போட்டிகளில், மூன்று வெவ்வேறு சேர்க்கைகளைப் பயன்படுத்தியது. நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கை சுனில் நரைன், ஆரோன் பின்ச், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்கினர். இப்படி மாற்றிக்கொண்டே போனால் அணி எப்படி நிலைக்கும்.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் டிம் சவுதி கூறும்போது, “நீங்கள் விரும்பிய வெற்றிகளைப் பெறாதபோது அது கடினம். ஒரு பெரிய ஏலத்திற்குப் பிறகு, நாங்கள் இன்னும் சரியான சேர்க்கைகளைக் கண்டறிய முயற்சிக்கிறோம். பல விளையாட்டுகளில் நாங்கள் நெருங்கி வந்தோம், ஆனால் தோல்வியில்தான் முடிந்தது.

நாங்கள் சில தொடக்க வீரர்களின் சில சேர்க்கைகளை முயற்சித்தோம், ஐபிஎல்லில் மோசமான வீரர்கள் யாரும் இல்லை, அவர்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். எனவே, இது வீரர்கள் தங்கள் பார்மைக் கண்டுபிடித்து, பார்மை கண்டுபிடித்துக் கொண்ட வீரர்களுடன் தொடர்ந்து ஆடுவதைப் பற்றியதாகும்.

வீரர்களை அடைக்கடி மாற்றுவ்தும் தூக்குவதும் சிறந்ததல்ல, ஆனால் நீங்கள் நிறைய விளையாட்டுகளில் வெற்றி பெறாதபோது அப்படி நடக்கவே செய்யும் ஆனால் அது உயர்ந்ததல்ல” என்று அய்யருக்கு ஒரு குட்டு வைத்தார் டிம் சவுதி.

First published:

Tags: IPL 2022, Shreyas Iyer, Virat Kohli