முகப்பு /செய்தி /விளையாட்டு / குல்தீப் யாதவ் முயற்சியை லலித் யாதவ் காலி செய்திருப்பார்- போவெல், அக்சர் படேலால் டெல்லி த்ரில் வெற்றி

குல்தீப் யாதவ் முயற்சியை லலித் யாதவ் காலி செய்திருப்பார்- போவெல், அக்சர் படேலால் டெல்லி த்ரில் வெற்றி

ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்

ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்

வான்கெடேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 41வது போட்டியில் கொல்கத்தா எடுத்த 146/9-ஐ விரட்டும்போது டெல்லி அணி 83/6 என்று தோல்வியின் பிடிக்குச் சென்று பிறகு ரோவ்மென் போவெல் (33) அக்சர் படேல் (24) ஆகியோர் அதிரடியில் 19வது ஓவரில் 150/6 என்று வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் அட்டவணையில் 6ம் இடம் பிடித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

வான்கெடேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 41வது போட்டியில் கொல்கத்தா எடுத்த 146/9-ஐ விரட்டும்போது டெல்லி அணி 83/6 என்று தோல்வியின் பிடிக்குச் சென்று பிறகு ரோவ்மென் போவெல் (33) அக்சர் படேல் (24) ஆகியோர் அதிரடியில் 19வது ஓவரில் 150/6 என்று வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் அட்டவணையில் 6ம் இடம் பிடித்துள்ளது.

குல்தீப் யாதவ்வை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைகழுவி விட்டது, இதனால் அவர் கொல்கத்தாவுக்கு எதிராக உத்வேக எழுச்சி பெற்று நேற்று 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்த முறை கொல்கத்தாவுக்கு எதிராக மட்டுமே 8 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார் குல்தீப்.

முதலில் பேட் செய்த கொல்கத்தாவுக்கு ரன்கள் வராமல் முஸ்தபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா பார்த்துக் கொண்டனர், வெங்கடேஷ் அய்யர் தொடக்கத்தில் இறங்கியும் சொதப்பினார். ஏரோன் பிஞ்ச்சை சக்காரியா வீழ்த்தினார். வெங்கடேஷ் அய்யர் பெடல் ஸ்வீப் ஆடி ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் ஆகி சொற்ப ரன்களில் வெளியேறினார். நைட் ரைடர்ஸ் 23/2.

குல்தீப் யாதவ் எனும் மாந்த்ரீகன்:

7 ஓவர்களில் 35/2 என்று இருக்கும் போது குல்தீப் யாதவ் வந்தார். தமிழக வீரர் பாபா இந்திரஜித் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்த பந்தே சுனில் நரைன் குல்தீப் பந்தில் எல்.பி. ஆனார். நிதிஷ் ராணா ஹாட்ரிக்கை தடுத்தார். ஷ்ரேயஸ் அய்யர் 37 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து ரிஷப் பந்த்தின் அதியற்புத ஸ்டன்னிங் கேட்சுக்கு குல்தீப் யாதவிடம் வெளியேறினார்.

கொல்கத்தாவின் ஆபத்பாந்தவர் ஆந்த்ரே ரசல் குல்தீப் யாதவ்வின் ராங் ஒன்னில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். பண்ட் உண்மையில் பந்தை சேகரித்து அடிக்கவில்லை, அவர் தவற விட்ட பந்து ஸ்டம்பைத் தாக்க ரசல் துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்ப்டு அவுட். 14 ஓவர்களில் 83/6.

நிதிஷ் ராணா, ரிங்கு சிங் கிரீசில் இருக்கும் போது ரிஷப் பண்ட் கேப்டன்சியில் சோடை போனார், குல்தீப் யாதவ்விடம் கொடுக்காமல் லலித் யாதவ்விடம் கொடுத்தார். இந்த லலித் யாதவ்வுக்கு ஏதோ பெரிய லாபி உள்ளது, அவரிடம் பந்தை கொடுத்து தவறு செய்தார் ரிஷப் பண்ட். லலித் யாதவ் 3 ஓவர்களில் 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் கொடுத்தார்.

நிதிஷ் ராணா 34 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 16 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரை முஸ்தபிசுர் அற்புதமாக வீச ரிங்கு சிங், நிதிஷ் ராணா, டிம் சவுதி விக்கெட்டுகளை எடுத்தார், கொல்கத்தா 146/9 என்று இருந்தது, லலித் யாதவ்வுக்கு ஓவரைக் கொடுக்காமல் குல்தீப் ஓவரை முடித்திருந்தால் கொல்கத்தா இன்னும் குறைவாகவே எடுத்திருக்கும். முஸ்தபிசுர் 4 ஓவர் 18 ரன் 3 விக்கெட்.

உமேஷ் அபாரம்; டெல்லி போராடி வெற்றி:

டெல்லி சேசிங் செய்த போது அதிரடி வீரர் பிரிதிவி ஷா முதல் பந்திலேயே உமேஷ் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா நல்ல வேகத்தில் வீசினார், மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரிகள் அடித்து அபாயகரமாகத் திகழ்ந்தார், இவர் கடைசியில் இன்னொரு ஹர்ஷித் பந்தை தூக்கி அடிக்க இன்சைடு எட்ஜில் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனது.

உமேஷ் யாதவ்

அப்போதுதான் மீண்டும் புரியாத புதிராக லலித் யாதவ்வை இறக்கி விட்டார், அவருக்கு பேட்டிங் வரவில்லை. ஒரு முனையில் வார்னர் அபாரமாக பவுண்டரிகளை அடித்து 47 ரன்களை எடுத்தார். 10வது ஓவரில் உமேஷ் யாதவ் டேவிட் வார்னரை துல்லிய பவுன்சரில் வீழ்த்தினார். லலித் யாதவ் அறுவை 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து நரைனிடம் எல்.பி.ஆனார். ரிஷப் பண்ட் 2 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேற 84/5 என்று டெல்லி தோற்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் அக்சர் படேல், ரோவ்மென் போவெல்லை ஒன்றும் செய்ய முடியவில்லை, அதுவும் ஆந்த்ரே ரசலை அக்சர் படேல் அப்பர் கட் , புல் ஷாட்டில் சிக்ஸ், பவுண்டரி விளாச கொல்கத்தாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அச்கர் படேல் ரன் அவுட் ஆக கொல்கத்தாவுக்கு லேசாக கதவு திறந்தது, ஆனால் ஷர்துல் தாக்கூர், போவெல் இருவரும் சுனில் நரைனை ஜாக்கிரதையாக ஆடினர். ஹர்ஷித் காயமடைந்ததால் வெங்கடேஷ் அய்யரிடம் பந்தைக் கொடுத்தார் ஷ்ரேயஸ் அய்யர், ஆனால் வெங்கடேஷ் அய்யர் 14 ரன்களைக் கொடுத்தார். பிறகு டிம் சவுதி, ஷ்ரேயஸ் அய்யரை சிக்ஸ் விளாசி ஆட்டம் முடிந்தது. ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்.

First published:

Tags: Delhi Capitals, IPL 2022, KKR, Kuldeep Yadav