ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உம்ரன் அதிவேக மின்னல் பந்தை வீசி என்ன பயன்?- பறந்தது பவுண்டரிக்கு- வில்லியம்சன் விட்ட கேட்ச் - டாக்கிங் பாயிண்ட்ஸ்

உம்ரன் அதிவேக மின்னல் பந்தை வீசி என்ன பயன்?- பறந்தது பவுண்டரிக்கு- வில்லியம்சன் விட்ட கேட்ச் - டாக்கிங் பாயிண்ட்ஸ்

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

வெற்றி பெற்றேயாக வேண்டிய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று ஐபிஎல் 2022 50வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் கேன் வில்லியம்சன் பல தவறுகளைச் செய்தார். முக்கியமாக போவெலுக்கு கையில் வந்த கேட்சை உம்ரன் மாலிக் பந்தில் விட்டது பேரழிவை ஏற்படுத்தியது சன் ரைசர்ஸுக்கு. அதன் பிறகுதான் போவெல் பேயாட்டம் ஆடிவிட்டார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வெற்றி பெற்றேயாக வேண்டிய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று ஐபிஎல் 2022 50வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் கேன் வில்லியம்சன் பல தவறுகளைச் செய்தார். முக்கியமாக போவெலுக்கு கையில் வந்த கேட்சை உம்ரன் மாலிக் பந்தில் விட்டது பேரழிவை ஏற்படுத்தியது சன் ரைசர்ஸுக்கு. அதன் பிறகுதான் போவெல் பேயாட்டம் ஆடிவிட்டார்.

  உம்ரன் மாலிக் நேற்று அதிவேக மின்னல் பந்தை வீசினார் இந்த ஐபிஎல் தொடரின் அதிவேக பந்து இதுதான், 20வது ஓவரில் செம சாத்து வாங்கிய உம்ரன் மாலிக் 4வது பந்தை பயங்கரமாக வீசினார் மணிக்கு 157 கிமீ வேகம் சென்ற அந்த பந்தை போவெல் பவுண்டரிக்கு அனுப்பியது ஒரு புறம் என்றாலும் அதிவேக பந்து ரெக்கார்ட் செய்து விட்டார் உம்ரன் மாலிக்.

  இவரை சரியாகப் பயன்படுத்த வேண்டும், பவர் ப்ளேவிலோ, இறுதி ஓவர்களிலோ இவரை கொண்டு வரக் கூடாது, மிடில் ஓவர்களில் பவர் ப்ளே முடிந்தவுடன், 10, 12, 14, 16 ஓவர்களையோ அல்லது 8 10, 14 16 ஓவர்களையோ, அல்லது ஒற்றைப்படையில் 7,9, 11 பிறகு 19வது ஓவர்களையோ வீச வைக்க வேண்டும். ஏனெனில் பீல்டிங்கை பரவலாக்கி, ஒரு ஸ்லிப் வைத்து இவரை ஷார்ட் பிட்ச் பந்தை வீசச் செய்தால் அவர் வேகத்துக்கும் பந்து எழும்புவதற்கும் புல், ஹூக் ஷாட் அடிக்க முடியாது ஏனெனில் பீல்டர்கள் டீப்பில் நிற்பார்கள், இதனால் பேட்டர்கள் கொடியேற்றி அவுட் ஆகத்தான் வாய்ப்பு. மாறாக பவர் ப்ளேயில் கொடுத்தால் தொட்டால் பறக்கிறது பவுண்டரிக்கு.

  இவரை பவர் ப்ளேவுக்குப் பிறகு கொண்டு வந்து மிடில் ஓவர்களில் இறுக்கி 2-3 எதிரணி விக்கெட்டுகளைக் காலி செய்தால் நிச்சயம் சன் ரைசர்ஸை தோற்கடிப்பது கடினம்.

  நேற்று இன்னொரு முக்கியமான தவறு ரிஷப் பண்ட் 9 பந்தில் 2 ரன் என்று தடவிக்கொண்டிருந்த போது கொண்டு வந்தாரே பார்க்கலாம் ஷ்ரேயஸ் கோபால் என்ற லெக் ஸ்பின்னரை அதுவும் இந்தத் தொடரின் முதல் போட்டிக்கு, ரிஷப் பண்ட்டிற்குக் கொண்டு வருகிறார்; வடிவேலு ஒரு படத்தில் பார்த்திபனிடம் கூறுவது போல் கொடுத்ததைக் கொடுத்த ஒரு ஒல்லியான ஆள் கிட்ட கொடுக்கப்படாதா, யானைக் கிட்ட கொடுத்து அது ஏறிமிதிச்சு குதிச்சு விளையாடிட்டுப் போயிடுச்சே என்பார். அது போல் 3 சிக்ஸ் ஒரு பவுண்டரி முடிந்தது கதை, இந்த 22 ரன்கள் சன் ரைசர்ஸ் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி.

  கேன் வில்லியம்சன் செய்த இன்னொரு மன்னிக்க முடியாத தவறு உம்ரன் மாலிக் பந்தில் அதிரடி மன்னன் போவெலுக்கு கேட்சை விட்டது. போவெல் அப்போது 14 பந்துகளில் 18 ரன் என்று இருந்தார். அப்போது கவரில் 30 யார்டு சர்க்கிளுக்கு அருகில் போவெல் அடித்த ஷாட் ஒன்று கையில் வந்து உட்கார்ந்தது கேட்சை விட்டார் கேன் வில்லியம்சன், இது பெரிய வில்லங்கமாகப் போக அதன் பிறகு அவரது 6 சிக்சர்களில் 5 சிக்சர்கள் வந்தது 3 பவுண்டரி வந்தது, 20 பந்துகளில் 49 விளாசினார். மொத்தமாக 35 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். இந்தக் கேட்சை விட்டது மேட்சை விட்டதாக மாறியது. ஸ்டீவ் வாஹ் ஒருமுறை 1999 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வீரர் கிப்சிடம் சொன்னாரே, ‘நீ கேட்சை விடல்ல, மேட்சை விட்டுட்ட’ என்று அந்தக் கதைதான் நேற்று நடந்தது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Kane Williamson, SRH