Home /News /sports /

சன் ரைசர்ஸ் கழற்றி விட்ட டேவிட் வார்னர் எழுச்சி- ஒரே பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் சாதனை

சன் ரைசர்ஸ் கழற்றி விட்ட டேவிட் வார்னர் எழுச்சி- ஒரே பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் சாதனை

வார்னர்

வார்னர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அவமானபடுத்தி அனுப்பிய ஆஸ்திரேலியாவின் அபார வீரர் டேவிட் வார்னர் அந்த அணிக்கு பாடம் புகட்டும் விதமாக செம பார்மில் இருக்கிரார், இரட்டைச் சாதனைப் பட்டியலில் இந்த ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ளார்.

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அவமானபடுத்தி அனுப்பிய ஆஸ்திரேலியாவின் அபார வீரர் டேவிட் வார்னர் அந்த அணிக்கு பாடம் புகட்டும் விதமாக செம பார்மில் இருக்கிரார், இரட்டைச் சாதனைப் பட்டியலில் இந்த ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் 41-வது லீக் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதியதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியை சேர்ந்த டேவிட் வார்னர் 26 பந்தில் 42 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இரண்டு சாதனை பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் சுனில் நரைன் பந்து வீச்சில் 176 ரன்கள் குவித்துள்ளார். 2 முறை மட்டுமே அவுட் ஆகி உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல் இதோ:

    சுனில் நரைனுக்கு எதிராக டேவிட் வார்னர் 176 ரன்கள் -2 முறை அவுட்

    பியூஸ் சாவ்லாவுக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 175 ரன்கள் -4 முறை அவுட்

    அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலி 160 ரன்கள் 1 முறை அவுட்

    மிஸ்ரா பந்து வீச்சில் விராட் கோலி 158 ரன்கள் 2 முறை அவுட்

    பிராவோ பந்து வீச்சில் விராட் கோலி 157 ரன்கள் 1 முறை அவுட்

    உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விராட் கோலி 150 ரன்கள் 3 முறை அவுட்

    மேலும் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் 1000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் 1005 ரன்கள் எடுத்துள்ளார்.

    1. சென்னை அணிக்கு எதிராக ஷிகர் தவான்- 1029

    2. கொல்கத்தா அணிக்கு எதிராக ரோகித் சர்மா - 1018

    3. பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் -1005

    4. கொல்கத்தா அணிக்கு எதிராக வார்னர் -1000
    Published by:Muthukumar
    First published:

    Tags: David Warner, Delhi Capitals, IPL 2022

    அடுத்த செய்தி