பயிற்சியின் போது கணுக்காலில் காயம் அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மொயீன் அலி நேற்று முன்தினம் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடவில்லை. ராயுடுவுக்கும் பீல்டிங்கில் கையில் காயம் ஏற்பட்டு காயத்துடன் தான் 39 பந்துகளில் 78 விளாசினார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணி தோல்வி மேல் தோல்வி கண்டு தடுமாறி வரும் நிலையில் சிஎஸ்கே அணிக்கு அவர் எப்போது திரும்புவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “மொயீன் அலியால் கணுக்காலை அசைக்க முடிகிறது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவருக்கு எலும்பு முறிவு எற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற காயத்தில் இருந்து மீள ஒருவாரம் பிடிக்கும். எலும்பு முறிவு ஏற்படாததால் மொயீன் அலி விரைவில் முழு உடல் தகுதியை எட்டுவார் என்று நம்புகிறோம்.
அம்பத்தி ராயுடுக்கு ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்ட கையில் மீண்டும் காயம் ஏற்பட்டாலும் அது பயப்படும் வகையில் இல்லை. தோனிக்கு முன்னதாக பேட்டிங் செய்ய ரவீந்திர ஜடேஜாவை அனுப்பியது குறித்து கேட்கிறீர்கள். 13-வது ஓவரிலேயே 4-வது விக்கெட் வீழ்ந்ததால் ரவீந்திர ஜடேஜாவை அனுப்பினோம். அந்த வரிசையில் அவர் கடந்த காலங்களில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்.
15-வது ஓவருக்கு பிறகு டோனி களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சீசனில் வாய்ப்பு வரும் போது ஹேங்கர்கேர் போன்ற இளம் வீரர்களை பயன்படுத்துவோம்’ என்று கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.
ஏற்கெனவே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.