ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நிச்சயம் பிராவோவை விட நான் மோசமாக வீச மாட்டேன் - தோனி ருசிகரம்

நிச்சயம் பிராவோவை விட நான் மோசமாக வீச மாட்டேன் - தோனி ருசிகரம்

தோனி -பிராவோ

தோனி -பிராவோ

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி, ஒரு கட்டத்தில் பிராவோவை கீப்பிங் செய்யச் சொல்லி தான் வந்து பந்து வீசலாம் என்று நினைத்ததாக குறிப்பிட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி, ஒரு கட்டத்தில் பிராவோவை கீப்பிங் செய்யச் சொல்லி தான் வந்து பந்து வீசலாம் என்று நினைத்ததாக குறிப்பிட்டார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6-ல் தோல்வி கண்டு புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது.

  ராயுடு தனிமனிதனாக ஆடியும் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் சென்னை அணி வீரர்கள் தோனி, பிராவோ, ருதுராஜ் ஆகியோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் ஒவ்வொரு புகைப்படப்பாக காண்பிக்கப்பட்டு அது குறித்து அவர்களுக்கு இருந்த நினைவுகள் பற்றி கேட்கப்பட்டது.

  அப்போது ஒரு புகைப்படத்தை பார்த்து பதில் அளித்த தோனி, " ஒரு ஓவருக்கு பிராவோ 1 வைடு பந்தை மட்டுமே வீசலாம் எனவும் 3-4 வைடு பந்துகளை வீச கூடாது எனவும் நான் தெரிவித்தேன்.

  பேட்ஸ்மேன்கள் பிராவோவின் பந்துகளை அடித்த விளையாடிய அந்த சமயத்தில் பிராவோவிடம் கீப்பிங்கை கொடுத்து விட்டு நான் பந்து வீசலாம் என நினைத்தேன் ஏனென்றால் என்னால் அதை விட மோசமாக பந்துவீச முடியாது " என தோனி ருசிகரமாகத் தெரிவித்தார்.

  ஒருவேளை தோனி நன்றாகப் பந்து வீசி பிராவோ தோனியை விடவும் நன்றாக கீப்பிங் செய்து விட்டிருந்தார் என்றால்... என்ன ஆகியிருக்கும் என்று கேட்கிறது நம் மனப் பட்சி.

  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, Dhoni, Dwayne Bravo, IPL 2022