ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி ஏற்றுக்கொண்டதால், அனைத்தும் சரியான இடத்திற்குத் திரும்பியது. புனேவில் உள்ள MCA ஸ்டேடியத்தில் 182 ரன் தொடக்க பார்ட்னட்ஷிப்புடன் டாப்-ஆர்டர் பிரமாதமாக ஆட புதுமுக வீரர் முகேஷ் சவுத்ரி தனது சிறந்த T20 பந்துவீச்சை பதிவு செய்ய 13 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கேவை மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திருப்பினார் எம்.எஸ்.தோனி.
203 ரன்களை சிஎஸ்கே குவிக்க, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் பிரமாதமாக ஆடியது, சிஎஸ்கேவுக்கு அதிக நெட் ரன் ரேட் வராமல் பார்த்துக் கொண்டது இதனால் 189 ரன்கள் வரை விரட்டியது. இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு வெற்றி பற்றியும் ஜடேஜா கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்தும் பேசினார்:
“தொடங்குவதற்கு நல்ல ஸ்கோராக இருந்தது. அப்படி ஒரு ஸ்கோர் இருக்கும் போது, பந்து வீச்சாளர்களுக்கு டிஃபென்ட் செய்வது சற்று எளிதாக இருக்கும். நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை, நீங்கள் ஒரே டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும்போது, ஒரே விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். கேப்டன் மாற்றத்தால் பெரிய மாற்றங்கள் இல்லை. எங்களுக்கு கிடைத்த இலக்கு நன்றாக இருந்தது, பனிப்பொழிவு இருப்பதால் பந்துவீச்சு நன்றாக இருக்க வேண்டும்.
நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றோம் மற்றும் ஆரம்ப ஓவர்களை பேட்டிங் மூலம் சிறப்பாகப் பயன்படுத்தினோம். அதன் பிறகு எங்களுக்கு நல்ல பந்துவீச்சு தேவைப்பட்டது. ஆறாவது ஓவருக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், பிட்சில் பந்து சற்றே பிடித்து நின்று வரத் தொடங்கியதும், சிறப்பாக வீசியதால் எதிரணிக்கு தேவைப்படும் ரன் விகிதம் எகிறியது.
200 ரன்களைத் துரத்தினாலும் எதிரணி ஒரு நல்ல தொடக்கத்திற்குப் பிறகு இலக்கை விரட்டி விட முடியும், ஆனால் எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் அதை முறியடித்தனர். நாங்கள் பேட்டிங்கில் சில பிரமாதமான ஆட்டங்களை ஆடினோம், ஆனால் பவுலிங்கின் போது ஒரு கட்டத்தில் நாங்கள் 2 ஓவர்களில் 25 ரன்களை கொடுத்தோம், இது போன்ற தருணங்களில் பந்து வீச்சாளர்கள் வித்தியாசமாக முயற்சி செய்ய வேண்டும்.
பந்து வீச்சாளர் ஒரு ஓவரில் 4 சிக்ஸர்கள் கொடுக்கிறார் என்றால் கூட மீதமுள்ள இரண்டு பந்துகளில் ஏதாவது செய்யலாம் என்று எனது பந்துவீச்சாளர்களிடம் கூறியுள்ளேன். எல்லோரும் இந்த கொள்கையை ஏற்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் அது வேலை செய்கிறது என்று நினைக்கிறேன்.
ஜடேஜா மாற்றம் குறித்து...
கடந்த சீசனிலேயே ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று எனக்கு தெரியும். முதல் இரண்டு ஆட்டங்களுக்கு, நான் அவருடைய கேப்டன்சியை மேற்பார்வையிட்டேன், பின்னர் அவரை அனுமதித்தேன். அவர் தனது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். நீங்கள் அவர்களுக்கு எல்லாவற்றையும் ஸ்பூனில் எடுத்து ஊட்ட முடியாது.
நீங்கள் கேப்டனாக ஆனவுடன், நிறைய விஷயங்கள் உங்களை அழுத்தும். இது அந்த வீரரின் செயல்திறனைப் பாதித்து கேப்டன்சி சுமை அவர்களை ஆக்ரமிக்கலாம் என்று நான் நினைக்கிறேன். கேப்டன்சி அவரது தயாரிப்பு மற்றும் செயல்திறனை சவாலுக்குள்ளாக்கியது என்று நான் நினைக்கிறேன், இதன் பொருள் அவரால் அதே தீவிரத்துடன் பேட் மற்றும் பந்துவீச்சை செய்ய முடியவில்லை.
நாம் மேம்படுத்த வேண்டியவை பல உள்ளன. கேட்ச்களை விடுகிறோம். இதன் மூலம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை, இளைய பந்துவீச்சாளர்களுடன் நீங்கள் உடன் இருக்க வேண்டும் அவர்களுக்கு களங்களைப் பற்றி சொல்ல வேண்டும். முகேஷ் மேலே வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. , இந்த மட்டத்தில் விஷயங்களை நீங்கள் போகட்டும் என்று விட்டுவிட முடியாது. முக்கியமான குறைபாடுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு கூறினார் தோனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Dhoni, IPL 2022, Ravindra jadeja, SRH