Home /News /sports /

‘தல’ ரிடர்ன்ஸ்! - தோனி கேப்டன்சியில் பந்து வீச்சு மாற்றம் களவியூகம் அற்புதம்

‘தல’ ரிடர்ன்ஸ்! - தோனி கேப்டன்சியில் பந்து வீச்சு மாற்றம் களவியூகம் அற்புதம்

தோனி கேப்டன்சி அனுபவத்தைக் காட்டினார்.

தோனி கேப்டன்சி அனுபவத்தைக் காட்டினார்.

ஜடேஜாவிடமிருந்து தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன்சியைப் பெற்றதையடுத்து நேற்று சிஎஸ்கேவின் ஆட்டத்தில் உற்சாகம் அதிகமிருந்ததைக் காண முடிந்தது, முக்கியமாக டெவன் கான்வே போன்ற ஒரு மைக் ஹஸ்ஸி தர வீரரை அணிக்குள் கொண்டு வந்து தொடக்கத்தில் இறக்கியது ஒன்று. அதே போல் களவியூகம், பந்து வீச்சு மாற்றம் ஆகியவையும் தோனி பாணியில் அமைந்தது சிஎஸ்கே மீட்டெழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.

மேலும் படிக்கவும் ...
    ஜடேஜாவிடமிருந்து தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன்சியைப் பெற்றதையடுத்து நேற்று சிஎஸ்கேவின் ஆட்டத்தில் உற்சாகம் அதிகமிருந்ததைக் காண முடிந்தது, முக்கியமாக டெவன் கான்வே போன்ற ஒரு மைக் ஹஸ்ஸி தர வீரரை அணிக்குள் கொண்டு வந்து தொடக்கத்தில் இறக்கியது ஒன்று. அதே போல் களவியூகம், பந்து வீச்சு மாற்றம் ஆகியவையும் தோனி பாணியில் அமைந்தது சிஎஸ்கே மீட்டெழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.

    தோனியிடம் மிகப்பெரிய சாதக அம்சம் என்னவெனில் இந்தியாவுக்கு கேப்டன்சி செய்தாலும் சிஎஸ்கேவுக்கு கேப்டன்சி செய்தாலும் எதிரணியினரின் வெற்றி வாய்ப்புகள் எப்படி எப்படியெல்லாம் சாத்தியம் என்பதை முன் கூட்டியே கணித்து விடுவார், அந்த வாசல்களை அடைக்க களவியூகம் பவுலிங்கில் துல்லிய மாற்றங்களைச் செய்வார், அதுதான் தோனியின் சக்சஸ் தாரக மந்திரமே!!

    203 ரன்கள் இலக்கை விரட்டும்போது தொடக்கத்தில் சன் ரைசர்ஸ் அடித்து ஆடியது, அபிஷேக் சர்மாவுக்கு ஒரு கேட்சும் விடப்பட்டது. 3 ஓவர்களில் 46 ரன்கள் பக்கம் வந்து விட்டனர். தொடக்க வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங் 3 பவுண்டரி 1 சிக்சர் கொடுத்ததோடு நோ-பால் வீசி ஃப்ரீ ஹிட்டெல்லாம் கொடுத்தார். பவர் ப்ளேவுக்குள் 50 ரன்கள் வந்து விட்டது.

    சவுத்ரி கையில் வந்த கேட்சை அபிஷேக் சர்மாவுக்கு விட்டார். ஆனால் தோனி என்ன செய்தார், அவரிடமே பந்தைக் கொடுத்து வீசச்சொன்னார். இந்தத் தொடரில் முகேஷ் சவுத்ரி தனக்கு வந்த 5 கேட்ச்களில் 3 கேட்ச்களைத் தவறவிட்டார். கேட்ச் விட்டதை நினைத்து அவர் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு அதிருப்தியில் நின்று கொண்டிருந்தார்.

    தோனி பந்து வீச அழைத்தவுடன் தீவிரமாக வந்தார், அபிஷேக் சர்மாவை வீழ்த்தி வெளியேற்றினார், கேட்ச் விட்டதனால் அதிக ரன்கள் எடுக்கப்படும் முன்னரே முகேஷ் அபிஷேக் சர்மாவை வீழ்த்தி விட்டார். ஆனால் மிக மிக முக்கியமான விக்கெட் இந்தத் தொடரில் அபாரமாக ஆடி வரும் ராகுல் திரிபாதி விக்கெட்தான், அவர் ஒரு குறிக்கோளுடன் ஆடக்கூடியவர், ஆனால் முகேஷ் பந்தைக் குத்தி எழுப்ப ராகுல் திரிபாதி அதை தேர்ட் மேன் திசையில் தூக்கி விட நினைத்தார், ஆனால் தோனிக்கு மிகவும் பிடித்த பீல்ட் பொசிஷன் ஷார்ட் தேர்ட்மேன் எப்பவும் அங்கு ஒரு ஆளை நிறுத்தி வைப்பார், நேற்றும் அவர் அங்கு சரியாக நிறுத்த ராகுல்திரிபாதி சரியாகக் கையில் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார், பிரமாதமான பந்து வீச்சு மாற்றம், களவியூகம்.

    அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தவுடன் கேன் வில்லியம்சன் எப்படியும் ஒரு முனையை தாங்கிப் பிடிக்க கொஞ்சம் ரன் வேகத்தை குறைத்துக் கொள்வார் என்பதைச் சரியாகக் கணித்த தோனி புதிர் ஸ்பின்னர் தீக்‌ஷனாவையும் இன்னொரு முனையில் ஜடேஜாவையும் கொண்டு வந்தார். இவர்களை அடிக்க முடியவில்லை. ஆஃப் சைடில் 30 அடி வட்டத்துக்குள் பீல்டர்களை வைத்து ஜடேஜாவை சற்றே வைடாக வீசச் சொல்ல பீல்டை ஊடுருவ முடியவில்லை.

    தோனி தன் பேட்டியில் கூறியது போல் சாண்ட்னரை 2 சிக்சர்கள் மார்க்ரம் அடித்தாலும் அதே ஓவரில் மீதமுள்ள பந்துகளில் ஏதாவது செய்ய முடியும் என்று டீப் மிட்விக்கெட்டைக் கொண்டு வந்தார், மார்க்ரமுக்கு சாண்ட்னர் வீசிய பந்து கொஞ்சம் ஒரு இஞ்ச் கூடுதலாக எழும்பி நின்று வந்தது தூக்கி அடித்தார் மார்க்ரம், பந்து கையில் போய் உட்கார்ந்தது.

    தொடர்ந்து தீக்‌ஷனாவை அடிக்க முடியாமல் போக, நிகோலஸ் பூரனுக்கு தோனி அமைத்த களவியூகத்தை அவரால் ஊடுருவ முடியவில்லை, கேன் வில்லியம்சனுக்கும் பூரனுக்கும் 8 ஓவர்களில் 101 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற மிரக்கிள் செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. பூரன் ஒரு ரிவர்ஸ் ஷாட் சிக்சரையும் ஒன்றிரண்டு பவுண்டரிகள் வந்தாலும் கடைசி 6 ஓவர்களில் 78 ரன்கள் என்பது டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா பாணி ஆட்டத்தை கோருவதாகும்.

    டிவைன் பிரிடோரியஸை அழகாகப் பயன்படுத்தினார் தோனி. அவர் கேன் வில்லியம்சனை எல்.பி.செய்தார். சஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தரை முகேஷ் வீழ்த்த கடைசி 2 ஓவர்களில் 50 என்றால் என்ன செய்ய முடியும்? நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சர்கள் என்று 64 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தாலும் 2 ஓவர்களில் 50 ரன்கள் எல்லாம் சாத்தியமே இல்லை,. சிஎஸ்கே 200 எடுக்காமல் கொஞ்சம் பின் தங்கியிருந்தாலும் தோற்றிருக்கும்.

    ஆனால் வித்தியாசமேற்படுத்துவது தோனியின் கேப்டன்சி துல்லியம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி