CSK vs SRH-தைரிய ருதுராஜ் கெய்க்வாட்-நேற்று உடைத்த சாதனைகள்- சச்சின் சாதனை சமன்
CSK vs SRH-தைரிய ருதுராஜ் கெய்க்வாட்-நேற்று உடைத்த சாதனைகள்- சச்சின் சாதனை சமன்
சாதனைகள் உடைத்த ருதுராஜ்- டெவன் கான்வே
சிஎஸ்கே அணியில் நேற்று ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (99) தைரியமாக ஆடினார், அதிவேக பவுலர் உம்ரன் மாலிக்கையே என்ன சேதி என்று கேட்டார். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இவரும் டெவன் கான்வேயும் (85) சேர்ந்து 17.5 ஓவர்களில் 182 ரன்களைச் சேர்த்தனர், இந்தப் போட்டியில் ருதுராஜ் சொந்தமாகவும் டெவன் கான்வேயுடனும் சேர்ந்து பல சாதனைகளை உடைத்தனர்.

57 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் ருதுராஜ் 99 ரன்களில் நடராஜன் பந்தில் காலியானார். தோனி கேப்டன்சிக்கு வந்தவுடன் அணிக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது.
உடைத்த சாதனைகள்:
ருதுராஜ் கெய்க்வாட் 31 ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து சச்சின் சாதனையை சமன் செய்தார். மார்க்கோ யான்சென் பந்தை சிக்ஸ் விளாசி 4 இலக்க மைல்கல்லை எட்டினார் ருதுராஜ்:
182 - ருதுராஜ் கெய்க்வாட்-டெவோன் கான்வே - சன் ரைசர்ஸுக்கு எதிராக (2022) - முதல் விக்கெட்டுக்காக
181* - ஷேன் வாட்சன்-ஃபாஃப் டு பிளெசிஸ் எதிராக பிபிகேஎஸ் (2020) - ஓப்பனிங் விக்கெட்டுகாக
165 - ராபின் உத்தப்பா-சிவம் துபே vs ஆர்சிபி (2022) - 3வது விக்கெட்
159 - மைக்கேல் ஹஸ்ஸி-முரளி விஜய் vs ஆர்சிபி (2011) - 1வது விக்கெட்
ஐபிஎல் தொடர்களில் 4வது அதிகபட்ச தொடக்கக் கூட்டணி:
ஜானி பேர்ஸ்டோவ்-டேவிட் வார்னர்: 185 vs ஆர்சிபி
கௌதம் கம்பீர்-கிறிஸ் லின்: 184* எதிராக குஜராத் லயன்ஸ்
KL ராகுல்-மயங்க் அகர்வால்: 183 vs RR
ருதுதாஜ் கெய்க்வாட்-டெவன் கான்வே: 182 vs சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.