IPL 2022 CSK vs RCBஆர்சிபிக்காக கோலி செய்ததை சிஎஸ்கேவுக்காக தோனி செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
IPL 2022 CSK vs RCBஆர்சிபிக்காக கோலி செய்ததை சிஎஸ்கேவுக்காக தோனி செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தோனி-கோலி
ஒரே அணிக்காக 200 சிக்சர்கள் அடித்த சாதனையை கிங் கோலி வைத்திருக்கிறார், அவர் ஆர்சிபிக்காக மட்டுமே 200 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார், அதே போல் தோனி சிஎஸ்கேவுக்கு சாதனை புரிய இன்னும் 6 சிக்சர்கள் தேவை. இதை இன்றைய போட்டியிலேயே அடிப்பாரா என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதற்கான டவுன் ஆர்டரில் அவர் தற்போது இறங்குவதில்லை என்பதும் அப்படி இறங்கினாலும் சிக்ஸ் பந்தை பாதுகாப்பாக ஒன்று இரண்டு என்று தட்டி விட்டு ரன்கள் சேர்க்கும் முறையில் தற்போது ஆடி வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் 2021 சீசனின் முடிவில் ஆர்சிபியின் தலைமைப் பொறுப்பை கோலி கைவிட்டார். CSK ஐபிஎல் 2022 புள்ளிகள் அட்டவணையின் அடிமட்டத்தில் உள்ளது - ஒன்பதாவது இடத்தில் உள்ளது - மேலும் அவர்கள் பிளேஆஃப்ஸ் நிலைக்குச் செல்ல விரும்பினால் மீதமுள்ள ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
டோனி இந்த சீசனில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி 9 ஆட்டங்களில் ஒரு அரைசதம் உட்பட 132 ஸ்டிரைக் ரேட்டில் 140 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2022ல் தோன் இதுவரை 5 சிக்ஸர்களை அடித்துள்ளார், மேலும் இப்போது 200 சிக்சர்கள் சாதனைக்கு அதாவது சிஎஸ்கே என்ற ஒரு அணிக்காக மட்டுமே 200 சிக்சர்கள் மைல்கல்லை எட்ட இன்னும் 6 சிக்ஸர்கள் மட்டுமே தேவை.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தனது 200வது போட்டியில் விளையாடுகிறார். RCB க்காக விராட் கோலிக்குப் பிறகு, ஒரு அணிக்காக 200 ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்ற இரண்டாவது வீரர் ஆவார் தோனி.
மறுபுறம், டி20 கிரிக்கெட்டில் 10,500 ரன்களை கடக்க கோஹ்லிக்கு இன்னும் 41 ரன்கள் தேவை. முன்னாள் சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல்லில் 2500 ரன்களை எட்ட இன்னும் ஒரு ரன் எடுக்க வேண்டும். 2500+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகள் என்ற இரட்டையை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இன்று இரவு ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் 7:30 மணிக்கு மோதுகின்றன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.