Home /News /sports /

IPL 2022 CSK vs RCB இன்றைய ஐபிஎல் பேச்சு: ‘டுபிளெசிஸ் & கோ விட்டுக் கொடுத்தால்தான் சிஎஸ்கேவுக்கு வெற்றி’- கோலிக்கு இன்னொரு சாதனை

IPL 2022 CSK vs RCB இன்றைய ஐபிஎல் பேச்சு: ‘டுபிளெசிஸ் & கோ விட்டுக் கொடுத்தால்தான் சிஎஸ்கேவுக்கு வெற்றி’- கோலிக்கு இன்னொரு சாதனை

படம்: ஆர்சிபி ட்விட்டர்.

படம்: ஆர்சிபி ட்விட்டர்.

இந்த ஐபிஎல் 2022 தொடரில் 4 போட்டிகளில் 4லும் தோற்று ஒரு இனம்புரியாத நிலையில் சிஎஸ்கே உள்ளது, என்ன செய்வதென்றே தெரியாமல் திருதிருவென விழிக்கிறார் தோனி மற்றும் கேப்டன் ஜடேஜா. இதில் விராட் கோலி இன்று ஒரு சாதனையை குறிவைத்துள்ளார்,

    இந்த ஐபிஎல் 2022 தொடரில் 4 போட்டிகளில் 4லும் தோற்று ஒரு இனம்புரியாத நிலையில் சிஎஸ்கே உள்ளது, என்ன செய்வதென்றே தெரியாமல் திருதிருவென விழிக்கிறார் தோனி மற்றும் கேப்டன் ஜடேஜா. இதில் விராட் கோலி இன்று ஒரு சாதனையை குறிவைத்துள்ளார், கோலி இன்று சிஎஸ்கேவுக்கு எதிராக 52 ரன்களை எடுத்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை எடுத்த 2வது வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக் காரர் ஆவார். ஏற்கெனவே புண்பட்டிருக்கும் சென்னைக்கு கோலியின் சாதனை நெருக்கடி வேறு.

    ஆம்! கோலி இன்று 53 எடுத்து விட்டால், ஆர்சிபி நிச்சயம் 180-190 ரன்களை எடுக்கும், சிஎஸ்கேவில் இந்த இலக்கை எட்ட ஆளில்லை. எனவே இன்றும் தோல்விதான், ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ் தன் முந்தைய பிரான்ச்சைஸி ஜெயித்துக் கொள்ளட்டும் என்று டுபிளெசிஸ் விட்டுக் கொடுத்தால் தான் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று என்று கிரிக்கெட் ஆர்வலர்களிடையே இன்றைய பேச்சாக உள்ளது.

    ஆர்சிபி அணியில் டுபிளெசிஸ், கோலி, கிளென் மேக்ஸ்வெல் அனைத்திற்கும் மேலாக தினேஷ் கார்த்திக் இருக்கும் பார்முக்கு இன்றும் சிஎஸ்கே வெற்றி கவுண்டமணி ஒரு படத்தில் ‘வடக்கிப்பட்டி ராமசாமி’ ஜோக்கில் கூறுவது போல் ‘ஊ ஹூ..’.தான்.

    ஹெட் டு ஹெட்:

    ஆனால் புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டால் இதுவரை இருஅணிகளும் 29 முறை மோதியதில் சிஎஸ்கே 19 முறை வென்றுள்ளது ஆர்சிபி 9 முறைதான் வென்றுள்ளது. சென்னையும், மும்பையும் இதுவரை இந்த சீசனில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை.

    பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 53 ரன்களை அடித்தால் சென்னை அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா சென்னைக்கு எதிரான விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார். சென்னை அணியுடன் இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 948 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி இன்றைய போட்டியில் 52 ரன்கள் அடித்தால் ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக விளையாடி 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

    சிஎஸ்கே உத்தேச லெவன்: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கே), சிவம் துபே, எம்.எஸ். தோனி,  டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி

    ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் , வனிந்து ஹசரங்க, சாமா மிலிந்த், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL 2022, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி