Home /News /sports /

IPL CSK vs RCB-தோனியின் சொல்படி நட- முகேஷ் சவுத்ரிக்கு தீபக் சாஹர் அறிவுரை

IPL CSK vs RCB-தோனியின் சொல்படி நட- முகேஷ் சவுத்ரிக்கு தீபக் சாஹர் அறிவுரை

முகேஷ் சவுத்ரி- சிஎஸ்கே

முகேஷ் சவுத்ரி- சிஎஸ்கே

சிஎஸ்கேவின் பலவீனமான பந்து வீச்சிலும் ஓரளவுக்கு நன்றாக ஸ்விங் பவுலிங் செய்து வருபவர் முகேஷ் சவுத்ரி, அவருக்கு காயமடைந்து வெளியில் இருக்கும் தீபக் சாஹர் அறிவுரை கூறிஉள்ளார்.

    சிஎஸ்கேவின் பலவீனமான பந்து வீச்சிலும் ஓரளவுக்கு நன்றாக ஸ்விங் பவுலிங் செய்து வருபவர் முகேஷ் சவுத்ரி, அவருக்கு காயமடைந்து வெளியில் இருக்கும் தீபக் சாஹர் அறிவுரை கூறிஉள்ளார்.

    முதலில் போராடிய முகேஷ் சவுத்ரி இப்போது நல்ல லெந்தில் வீசுகிறார் இதற்கு தீபக் சாஹர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

    ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த முகேஷ் சவுத்ரி கூறியதாவது:

    தீபக் [சாஹர் சிஎஸ்கேக்காக சில காலமாக விளையாடி வருகிறார். அனுபவஸ்தர், அவர் ஒரு அற்புதமான பந்து வீச்சாளர். நான் அவருடன் தொடர்பில் இருக்கிறேன், அவர் எனக்கு நிறைய சொல்லித் தருகிறார். சூழ்நிலையை எப்படி அலசுவது, குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன பந்து வீசுவது என்று சொல்லியிருக்கிறார். போட்டியின் ஆரம்ப காலக்கட்டத்தில் நான் நன்றாக வீசவில்லை. தீபக் சாஹர் எனக்கு போன் செய்து டிப்ஸ் கொடுத்தார். என்னிடம் என்ன குறை, எப்படி மேம்படுத்துவது என்று சொன்னார். அங்கிருந்து, நான் சிறப்பாக வீசத் தொடங்கியுள்ளேன், என்றார் முகேஷ்.

    கடந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு வலைப் பந்துவீச்சாளராக இருந்த சவுத்ரி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 25.45 என்ற சராசரியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கேயின் கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் 4/46 என்று மிகச்சிறப்பாக வீசினார்.

    “நான் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை எடுத்த போது சாஹர் என்னை பாராட்டினார். பேட்ஸ்மேன் மீது கண்ணை வை, மாஹி பாய் (தோனி) என்ன சொல்கிறாரோ அதன் படி நட. அவர் எனக்கு நிறைய உதவினார், உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் கடும் அழுத்தத்தில் இருந்தேன். அப்போது தீபக் பாயின் வார்த்தைகள் தான் எனக்கு ஊக்கமளித்தன” என்றார் முகேஷ் சவுத்ரி
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL 2022, RCB

    அடுத்த செய்தி