Home /News /sports /

CSK vs PBKS: கோலிக்கு அடுத்து இவர்தான்- சிஎஸ்கே-யை புரட்டி எடுக்கும் ஷிகர் தவான்

CSK vs PBKS: கோலிக்கு அடுத்து இவர்தான்- சிஎஸ்கே-யை புரட்டி எடுக்கும் ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 88 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலிக்கு அடுத்ததாக 6,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஷிகர் தவான்.

மேலும் படிக்கவும் ...

    இதில் இன்னொரு விசேஷம் என்னவெனில் 6,000 ரன்களில் ஆயிரத்துக்கும் கூடுதலான ரன்களை சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டுமே விளாசியுள்ளார்.

    முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இன்னிங்ஸை பிரமாதமாகக் கட்டமைத்தார், கடைசியில் அடிக்க முடியாத டிவைன்பிராவோ பந்துகளையும் பதம் பார்த்தார், கடைசியில் ஷிகர் தவான் அடித்த ரன்கள் இல்லையெனில் நேற்று ராயுடுவுக்கு போட்டுக்கொடுத்ததற்கு சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கும்.

    அடுத்து ஆடிய சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அம்பதி ராயுடு 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் புதிய மைல் கல்லை தொட்டுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் 199 இன்னிங்சில் 6086 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 46 அரை சதமும் அடங்கும். நேற்று 2 ரன் எடுத்தாபோது ஷிகர் தவான் 6 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்தார்.

    ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எடுக்கும் 2-வது வீரர் ஆவார். விராட் கோலி 207 இன்னிங்சில் 6,402 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா (5,764), டேவிட் வார்னர் (5,668), ரெய்னா (5,528) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022, Shikhar dhawan

    அடுத்த செய்தி