Home /News /sports /

CSK vs PBKS- அம்பதி ராயுடுவுக்கு போட்டுக்கொடுத்தும் சிஎஸ்கே தோல்வி, 5 வைடுகள் போயிருக்க வேண்டிய பந்தில் அவுட் ஆன தோனி

CSK vs PBKS- அம்பதி ராயுடுவுக்கு போட்டுக்கொடுத்தும் சிஎஸ்கே தோல்வி, 5 வைடுகள் போயிருக்க வேண்டிய பந்தில் அவுட் ஆன தோனி

ரபாடா யார்க்கரில் பவுல்டு ஆன ராயுடு, கொண்டாடிய ரோட்ஸ்.

ரபாடா யார்க்கரில் பவுல்டு ஆன ராயுடு, கொண்டாடிய ரோட்ஸ்.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸை வெற்றி பெறச் செய்வதற்காகவே சில வேலைகள் செய்யப்பட்டன.

  நேற்று சென்னை சூப்பர் கிங்ஸை வெற்றி பெறச் செய்வதற்காகவே சில வேலைகள் செய்யப்பட்டன, அணித் தேர்வில் நேதன் எல்லிசை, அருமையான இன்ஸ்விங் பவுலர் வைபவ் அரோரா ஆகியோரை உட்கார வைத்தது முதல் தினேஷ் கார்த்திக்கிற்கு அடுத்ததாக நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் லிவிங்ஸ்ட்னை இறக்காமல் பானுகா ராஜபக்சேவை இறக்கி விட்டதும், ஒரு நல்ல பந்தில் கூட ஷாட் ஆட முடியாத அம்பதி ராயுடுவுக்கு முழுக்க முழுக்க புல்டாஸ், ஷார்ட் பிட்ச் போட்டுக் கொடுப்பதற்காகவே திடீரென சந்தீப் சர்மாவை அணியில் எடுத்ததும், தோனி விளாசுவதற்கென்றே ரிஷி தவானை கடைசி ஓவருக்கு மீதம் வைத்திருந்ததும், இவற்றையெல்லாம் மீறியும் பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கேவை வீழ்த்தியது என்றால் அது ஒரு தனித்துவ ஐபிஎல் ஆச்சரியமே.

  இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் சிஎஸ்கேவை இருமுறையும் இந்த ஐபிஎல் தொடரில் வீழ்த்தி டாப் -4-ல் இடம்பெறும் வாய்ப்பை பிரகாசமாக வைத்துக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு இதே ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்ற்து என்றாலும் ரவீந்திர ஜடேஜா தங்கள் பேட்டிங் மேல் நம்பிக்கை இல்லாமல் பீல்டிங்கைத் தேர்வு செய்ததில் ஆரம்பித்தது கோளாறு.

  தோனி


  மிக மோசாமன தோல்வியை சிஎஸ்கே தழுவியிருக்க வேண்டும், அப்போதுதான் பாரிவள்ளல், ஐபிஎல் வரலாற்றில் இது போன்று முக்கியமான தருணங்களில் வாரி வழங்கிய சந்தீப் சர்மா தனது அரைகுறை வேகப்பந்து வீச்சில் ஒரே ஓவரில் 3 சிக்சர்களுடன் 23 ரன்கள் வாரி வழங்கினார். அதாவது 15வது ஓவர் முடிவில் 118/4. என்று வெற்றி பெற ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில் அம்பதி ராயுடுவுக்கு வாகாக ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசினாரே பார்க்கலாம். கேப்டன் மயங்க் அகர்வாலும் வாயை மூடிக்கொண்டு இருந்தார்.

  புல்டாஸாக போட்டுக் கொடுத்த வள்ளல் சந்தீப் சர்மா


  ஒரே புல்டாஸ்கள் மயம். 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி, இப்படி போட்டுக்கொடுக்கப்பட்டது, ராயுடு அடித்த 78 ரன்களில் சந்தீப் சர்மாவை மட்டும் 36 ரன்கள் என்றால் பார்த்துக் கொள்ளலாம், ஒரு நல்ல பந்தைக் கூட ராயுடுவால் அடிக்க முடியவில்லை காரணம் அவர் நேற்று உடல் நிலை சரியில்லாமல் இருந்தது போல் தெரிந்தது. வலது கை பேட்ஸ்மெனுக்கு டி20 கிரிக்கெட்டில் தன் அரைகுறை வேகத்தை வைத்து கொண்டு ரவுண்ட் த விக்கெட்டில் வீசுகிறார் சந்தீப் சர்மா என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? போட்டுக்கொடுப்பு பவுலிங் என்றுதானே நினைக்க முடியும்?

  ஏனெனில் ராயுடுவுக்கு அன்று பும்ரா வீசியது எப்படி புரியவில்லையோ அதே போல் நேற்று ரபாடா வீசுவது புரியவில்லை, கடைசியில் யார்க்கரில் கால்காப்பில் பட்டு பவுல்டு ஆகி வெளியேறினார். ரபாடாவின் கடைசி 2 ஓவரும், அர்ஷ்தீப் சிங்கும் நேற்று போட்டுக்கொடுப்பு பவுலிங்குக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைத்தார்கள்.

  இன்னொரு நம்பகமில்லாத பவுலர் என்றால் அது ரிஷி தவான். இவர் கடைசி ஓவரை வீச வருவார் என்று மிகச்சரியாகவே கணித்தோம், அதே போல்தான் நடந்தது, ஆனால் சிஎஸ்கேவுக்கு தேவை 28 ரன்கள். தோனி தி பினிஷர் இருக்கிறார். முதல் பந்தை 127 கிமீ வேகத்தில் 40 வயது தோனிக்கு வாகாக லெக் திசையில் ஷார்ட் பிட்ச் ஆக எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் என்ற ரீதியில் வீச அதைக் கூட சிக்சர் அடிக்க முடியாதவரா என்ன தோனி, மிகத்துல்லியமாக ஸ்டாண்ட்ஸுக்கு அனுப்பினார். அடுத்து ஒரு வைடு வேறு, சரி இன்றும் தோனி பினிஷராகவே முடிவார் என்று எதிர்பார்த்தபோது, ஒரு யார்க்கர் நோ ரன், அடுத்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே வைடு அதை தோனி விட்டிருந்தால் 5 வைடுகள் கிடைத்திருக்கும். ஆனால் தோனி அதை ஆவலாதியாக வாரிக்கொண்டு அடிக்கப் போக பேட்டின் நுனியில் பட்டு பேர்ஸ்டோ கையில் போய் உட்கார்ந்தது, மட்டமான ஒரு பந்தில் தோனி வெளியேறியது சிஎஸ்கே தனக்கே வைத்துக் கொண்ட ஆப்பு என்றுதான் கூற வேண்டும்,

  மற்றபடி ரிஷி தவானை கடைசி ஓவரில் வைத்திருந்த வரை சிஎஸ்கேவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது பஞ்சாப் கிங்ஸ் என்றே கூற வேண்டும்.

  பேட்டிங்கிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி மந்தம்:

  பவர் ப்ளேயில் பஞ்சாப் கிங்ஸ் 37/1 என்று இருந்தது, மிகவும் மந்தமாக ஆடினார்கள். வெற்றி பெறுவதற்கான உந்துதல் அவர்கள் உடல் மொழியிலும் இல்லை சிஎஸ்கே உடல்மொழியிலும் இல்லை. ரிலாக்ஸாகவே இரு அணிகளும் ஆடினர். இது எப்படி என்று புரியவில்லை. பானுகா ராஜபக்சேவை திடீரென அணிக்குள் எடுத்து பார்மில் உள்ள லிவிங்ஸ்டனுக்கு முன்னால் இறக்கியது உஷ் கண்டுக்காதீங்க தருணம் என்றால் அவருக்கு சிஎஸ்கே 2 கேட்ச்களை விட்டது அதைவிட உஷ் கண்டுக்காதீங்க தருணமாக இருந்தது.

  ஷிகர் தவான்


  இரு அணிகளுமே லிவிங்ஸ்டன் இறங்குவதை வேண்டுமென்றே தாமதப்படுத்த ஆடின, சிஎஸ்கே அப்படி ஆடுகிறது என்றால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அப்படி ஆடியதுதான் புரியாத புதிர். ராஜபக்சவும், ஷிகர் தவானும் அடிக்க வேண்டிய நேரத்தில் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து கொண்டிருந்தனர். கடைசியில் பானுகா ராஜபக்ச 32 பந்தில் 42 என்று அவுட் ஆன போதுதான் லிவிங்ஸ்டன் இறக்கப்பட்டர், அப்போது 18வது ஓவர் நடந்து கொண்டிருந்தது. லிவிங்ஸ்டன் 7 பந்தில் 2 சிக்சர்களுடன் 19 ரன்கள் விளாசினார். அவர் மட்டும் கொஞ்சம் முன்னால் இறங்கியிருந்தாலோ அல்லது ராஜபக்சவுக்கு பதில் அவரது டவுனில் லிவிங்ஸ்டன் இறங்கியிருந்தாலோ கடைசியில் ஷிகர் தவான் அடித்த அடிக்கு ஸ்கோர் 200-ஐத் தொட்டிருக்கும் சிஎஸ்கே இன்னும் பெரிய உதையை வாங்கியிருக்கும்.

  சிஎஸ்கேவும் இலக்கை விரட்டும்போது மந்தமாக தொடங்கி ஆடியது, 40/3 விக்கெட் பறிகொடுத்தது. ருதுராஜ் 13வது ஓவர் வரை நின்றும் 27 பந்துகளில் 30 ரன்கள்தான் எடுக்க முடிந்தது, அவுட்டும் ஆகிவிட்டார். சிஎஸ்கே 11 ரன்களில் தோற்றது ஏதோ நெருக்கமான போட்டி என்பது போன்று தோன்றும் வெகு முன்னரே சிஎஸ்கே தோற்றுவிட்டது, சந்தீப் சர்மா மட்டும் ராயுடுவுக்கு அந்த ஓவரை போட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால் குறைந்தது 30 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்திருக்கும். ஆட்ட நாயகன் ஷிகர் தவான். பஞ்சாப் கிங்ஸ் 8 மேட்ச்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்றாலும் நெட் ரன் ரேட்டில் மைனஸ் 0.419 என்று அட்டவணையில் 6ம் இடத்தில் உள்ளது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, Dhoni, IPL 2022

  அடுத்த செய்தி