Home /News /sports /

டைட்டன்ஸ்களின் மோதல் அடிமட்ட மோதல் ஆன கதை- சிஎஸ்கே-மும்பை தரமற்ற போட்டி

டைட்டன்ஸ்களின் மோதல் அடிமட்ட மோதல் ஆன கதை- சிஎஸ்கே-மும்பை தரமற்ற போட்டி

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே.

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே.

கிளாஷ் ஆஃப் த டைட்டன்ஸ் என்று மும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே போட்டிகளை விளம்பரப்படுத்துவார்கள், ஏதோ இங்கிலிஷ் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட்- ஆர்சனல் மோதல் போல், ஸ்பானிய லீகின் ரியால் மேட்ரிட்-பார்சிலோனா மோதல் போல் ஹைப் கொடுத்தார்கள், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டின் இந்தத் தொடரின் குறைந்தபட்சம் 2வது மோசமான போட்டியாக அமைந்தது. தர அளவில் மோசமான முதல் போட்டி ஆர்சிபி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போட்டி, 2வது இடம் நேற்றைய மும்பை -சிஎஸ்கே போட்டிக்கே.

மேலும் படிக்கவும் ...
கிளாஷ் ஆஃப் த டைட்டன்ஸ் என்று மும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே போட்டிகளை விளம்பரப்படுத்துவார்கள், ஏதோ இங்கிலிஷ் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட்- ஆர்சனல் மோதல் போல், ஸ்பானிய லீகின் ரியால் மேட்ரிட்-பார்சிலோனா மோதல் போல் ஹைப் கொடுத்தார்கள், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டின் இந்தத் தொடரின் குறைந்தபட்சம் 2வது மோசமான போட்டியாக அமைந்தது. தர அளவில் மோசமான முதல் போட்டி ஆர்சிபி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போட்டி, 2வது இடம் நேற்றைய மும்பை -சிஎஸ்கே போட்டிக்கே.

ஆட்டம் தொடங்கும்போதே மின்சார பிரச்சனையினால் ரிவியூ சிஸ்டம் வேலை செய்யாது என்றார்கள். பிட்ச் பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்கும் ஓரளவுக்கு வாய்ப்புள்ளதாக இருந்தால் போட்டி நன்றாக இருக்கும், தோனி சொல்வது போல் 130 ரன்களுக்குக் கீழ் ஒரு போட்டியாகவே இல்லாமல் ஆகி விடும். ரிவியூ சிஸ்டன் இல்லாததால் சிஎஸ்கேவின் ஸ்டார் பேட்டர் டெவன் கான்வே, சாம்ஸ் பந்தில் கால்காப்பில் வாங்க நடுவரோ, ‘எல்லாத்துக்கும் ரிவியூ கேப்பீங்க இல்ல’ இப்ப என்ன செய்வீங்கன்னு கடும் முகத்துடன் கையை உயர்த்தி விட்டார். அங்கேயே சிஎஸ்கே உடைந்து விட்டது.

ஆக மொத்தத்தில் பந்துகள் ஸ்விங், பவுன்ஸ் ஆனால் என்ன டைட்டன்ஸ்களானாலும் கத்துக்குட்டிகள்தான். இப்படிப்பட்ட பிட்ச்களை வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் அணிகள் ஆடும்போது தயாரித்தால் இந்திய பேட்டிங் மேம்படும், அவர்களுக்குக் குழிப்பிட்ச், ஐபிஎல் தொடருக்கு இப்படி ஒரு பிட்ச். ஆனால் சிஎஸ்கேயை சிதைக்க வேண்டும் என்றே இத்தகைய பிட்ச் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது, ஆனால் அந்தப் பொறியில் மும்பையும் வீழ்ந்திருப்பார்கள், எப்படியோ திலக் வர்மா, ஷோகீன் காப்பாற்றி விட்டனர்.

பந்துகள் ஸ்விங் ஆகும் போது இங்கிலாந்து வீரர் மொயின் அலியும் இரையானார். பவுன்சரை அசிங்கமாக ஆடி ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். 4 பந்தில் 2 ரன்களுக்கு 2 விக்கெட். ராபின் உத்தப்பா பாவம் செம தடவு தடவி 1 ரன்னில் பும்ரா பந்து அவர் லெவலுக்கு கொஞ்சம் அதிகம் தான், உள்ளே வந்து பிறகு லேட் ஸ்விங்கில் நேராக கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ருதுராஜ் ஒரு பவுண்டரி பும்ராவை அடித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் லெக் சைடு வைடுபாலை தொட்டு எட்ஜ் ஆகி 7 ரன்களில் வெளியேறினார். ராயுடுவும் அற்புதமான பந்தில் 10 ரன்களில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுக்க சிஎஸ்கே 29/5 என்று ஆனது. ஷிவம் துபே 9 பந்தில் 10 எடுத்தார். ஆனால் மெரிடித்தின் ஆஃப் அண்ட் மிட்ல் ஷார்ட் பாலுக்கு இஷான் கிஷனின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். 39/6 என்று ஆனது.

தோனி இது போன்ற சூழ்நிலையில் எளிதாக விடுபவர் அல்ல, அவர் குமார் கார்த்திகேயா சிக்க 2 பவுண்டரிகள் விளாச ஸ்கோர் 50 ரன்களைக் கடந்தது. ஷோகீனை ஒரு சிக்ஸ் அடித்தார் தோனி. பிராவோ அவுட் ஆவது போலவே ஆடிக்கொண்டிருந்தார், ஆனால் குமார் கார்த்திகேயாவை லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார். தோனி ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மெரிடித்தை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். 16 ஓவரில் சிஎஸ்கே 97 ரன்களுக்குக் காலியானது.

சரி சிஎஸ்கேதான் இப்படி என்றால்...மும்பையும் சளைத்ததல்ல:

தோனி 3 ஸ்லிப்களை நிறுத்தி முகேஷ் சவுத்ரி, சிம்ரஜீத் சிங் ஆகியோர் ஓவர்களை முடித்து விட நினைத்தது, மும்பை இந்தியன்ஸின் அடிவயிற்றைக் கலக்கியது. சிஎஸ்கே போலவே முதல் 5 ஒவர்களில் 33/4 என்று மும்பை சரிந்தது. இஷான் கிஷனுக்கு ஒன்றும் புரியவில்லை, வெகு சீக்கிரமே பந்து மட்டையில் பட வேண்டும் என்று நினைக்கிறார், பாடம் கற்றுக் கொள்ளவில்லை நன்றாக வெளியே சென்ற முகேஷ் பந்தை காலும்ம் நகராமல் ஒன்றும் நகராமல் மட்டையை மட்டும் நீட்டினார். தோனியின் கேட்சுக்குக் காலியானார்.

ரோஹித் சர்மா மட்டும்தான் இங்கு நின்று கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று 4 பவுண்டரிகளை விளாசி 18 ரன்களில் இருந்த போது இவரும் வெளியே போகும் பந்தை இடித்து ஆட்டமிழந்தார். டேனியல் சாம்ஸ் புல்டாஸ் பந்தை அடிக்காமல் விட்டு அடுத்த இன்ஸ்விங்கரில் எல்.பி, ஆனார். அறிமுக வீரர், தென் ஆப்பிரிக்காவின் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸும் டேனியல் சாம்ஸ் போலவெ எல்.பி.ஆனார்.

பிறகு திலக் வர்மா, ஷோகீன் கொஞ்சம் பொறுமையுடன் பொறுப்புடன் ஆடி சிஎஸ்கேவிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்ல டிம் டேவிட் சிக்சர்களுடன் முடித்தார்.

ஆனால் கிளாஷ் ஆப் த டைட்டன்ஸ், ஒரு அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி, இன்னொரு அணி 4 முறை வென்றுள்ளது, ஆனால் டைட்டன்ஸ்கள் போல் ஆடாமல் கத்துக்குட்டிகள் போல் ஆடினர். மேட்ச் சுவாரஸியமாக இருந்தாலும் உயர் தர கிரிக்கெட் ஏற்படுத்தும் சிலிர்ப்பு இதில் ஏற்படவில்லை, மாறாக தரமற்ற கிரிக்கெட்டின் எரிச்சல் தரும் சுவாரஸ்யமே மிஞ்சியது.
Published by:Muthukumar
First published:

Tags: CSK, IPL 2022, Mumbai Indians

அடுத்த செய்தி