ரவீந்திர ஜடேஜா அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக இடம்பெறமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.
இந்த ஆண்டு ஆரம்பமே ஜடேஜாவுக்கு சரியில்லை, எந்த நேரத்தில் கேப்டன்ஷிப் கொடுத்தார்களோ 8 போட்டிகளில் 5-ல் தோற்றது சிஎஸ்கே.கேப்டன்சி மீண்டும் தோனியிடம் வந்தது. அப்போது ஜடேஜாவின் பவுலிங், பேட்டிங் கொஞ்சம் மேம்பட்டது.
இந்நிலையில் ஜடேஜா காயம் காரணமாக ஐபிஎல் 2022 தொடரிலிருந்தே விலகினார். இதை வைத்து பெரிய வதந்திகள் உலாவி வருகின்றன, சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கம் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்தது. இதனையடுத்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணியின் திரைக்குப் பின்னால் ஏகப்பட்டது நடக்கின்றது. கடந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா இப்போது ஜடேஜாவா என்று அவர் ஐயம் எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் யூ டியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா பேசியதாவது:
ரவீந்திர ஜடேஜா அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவுக்கு ஆட மாட்டார். சிஎஸ்கே முகாமில் இப்படி ஏதாவது நடக்கும் ஆனால் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் தெரியாது. ஒரு வீரர் காயமா? இல்லை ட்ராப்பா என்பதையெல்லாம் சொல்லவே மாட்டார்கள். 2021-ல் சுரேஷ் ரெய்னாவுக்கு நடந்தது, இந்த ஆண்டு ஜடேஜாவுக்கு நடக்கிறது. ரெய்னாவை இப்படித்தான் திடீரென அம்போவென்று விட்டார்கள்.
சிஎஸ்கே அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும். கணிதப்படி அவர்கள் தகுதி பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு வெற்றி பெற்றாக வேண்டும். மும்பையுடன் ஆடும்போது கடினமாக இருக்கும் ஆனால் சுவாரஸ்யமாக இருக்கும்.
என்றார் ஆகாஷ் சோப்ரா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2022, Ravindra jadeja