இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)2022 இன் 59வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இன்று வான்கடேயில் சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) எதிர்கொள்ளும் போது ஜஸ்பிரித் பும்ரா ஒரு மேல்மட்டசாதனையைக் குறிவைத்துள்ளார். இன்று 2 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
2 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி விட்டால் குறைந்த ஓவர் வடிவமான டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சளர் என்ற பெருமையை எட்டுவார். ஒரு சில இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பும்ராவை விட அதிக விக்கெட்டுகளை பெற்றிருந்தாலும், வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரும் இந்த 250 விக்கெட் சாதனையை நிகழ்த்தியதிலை.
மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் வேகத் தாக்குதலின் முன்னிலை பவுலரான பும்ரா 2013 இல் குஜராத்துக்காக தனது T20-ல் அறிமுகமானார். அவர் மும்பை இந்தியன்ஸுக்காக இன் ஜான் ரைட்டால் கண்டுப்பிடிக்கப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸுக்காக அறிமுகமானார்.
மும்பை இந்தியன்சுக்கு வந்த உடனேயே 2 சீசன்களில் தான் யார் என்பதை உலகிற்குக் காட்டினார், வித்தியாசமான ஆக்ஷனில் பந்தை கொண்டு வந்து சொருகும் ஒரு ஜொயெல் கார்னர் ரக பவுலர் என்பது தெரிந்தது.
அவர் இந்த வடிவத்தில் வீழ்த்திய 248 விக்கெட்டுகளில் 67 விக்கெட்டுகள் டி20 சர்வதேச போட்டிகளில் எடுத்ததாகும். மீதி விக்கெட்டுகள் குஜராத்துக்காக ஆடும்போதும் மும்பை இந்தியன்ஸுக்காகவும் எடுக்கப்பட்டவை ஆகும்.
சிஎஸ்கே அணி எப்படியாயினும் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் ஆடும் என்பதால் அன்று போல் பும்ரா இன்றும் 5 விக்கெட்டுகளை எடுக்க முடியாவிட்டாலும் டெவன் கான்வே, ருதுராஜை காலி செய்து விட்டால் சிஎஸ்கேயே காலியாகிவிடும்.
இன்று இரவு 7:30 மணிக்கு இந்த விறுவிறுப்பான போட்டி நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2022, Jasprit bumrah, Mumbai Indians