சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆடிய நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோனியின் புகழ்பெற்ற பினிஷிங்கில் கடைசி 4 பந்துகளில் உனாட்கட் வீசிய ஓவரில் 6,4, 2, 4 என்று வெற்றியுடன் முடித்தார். கிரேட் பினிஷரிடம் இன்னும் தாக்கம் இருக்கிறது, ஆனால் உனாட்கட் லெந்த்தும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. தோனி வழக்கமாக ஒரு ஷாட் தான் ஆடுவார், அந்த இடத்தில் கொண்டு வந்து ஒருபந்தைப் போட்டார் உனாட்கட், அதுவும் 127 கிமீ வேகத்தில் யார் இருந்தாலும் அது சிக்ஸ்தான்.
அடுத்த பந்தே ஸ்லோ பவுன்சர் போடுகிறேன் என்று லெக் ஸ்டம்பில் வாகாக விசினார், இதுவும் யார் இருந்தாலும் பவுண்டரிதான். கடைசி பந்து சற்றே சுமாராக வீசினாலும் லெக் ஸ்டம்பில் கொண்டு வந்து போட்டார் தோனி பவுண்டரிக்கு விரட்டி வெற்றி பெறச் செய்தார்.
பும்ரா கடைசி ஓவரை வீசுமாறு பவுலிங்கை அமைத்திருந்தால் நிச்சயம் 17 ரன்களை கடைசி ஓவரில் அடித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது, ஏனெனில் பும்ரா மணிக்கு 140-145 கிமீ வேகத்தில் வீசுவதால் 40 வயது தோனி மட்டையின் வேகம் அதற்கு நிச்சயம் ஈடு கொடுக்க முடியாது, மாறாக உனாட்கட் போன்ற பொய் பவுலரிடத்தில் போய் கடைசி ஓவரில் அதுவும் தோனி இருக்கும் போது கொடுக்கலாமா? ரோஹித் சர்மாவின் கேப்டன்சி கேள்விக்குரியதே.
ஏனெனில் 18வது ஓவரை வீசிய உனாட்கட் அப்போதே வேகமும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் புல்டாசாக வீசி 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதற்கு முந்தைய 17வது ஓவரில்தான் பும்ராவை ஒன்றும் செய்ய முடியவில்லை 6 ரன்களையே விட்டுக்கொடுத்தார்.
டேனியல் சாம்ஸ் 4 ஓவர் 30 ரன் 4 விக்கெட், ஹிருதிக் ஷோகீன் 4 ஓவர் 23 ரன் என்று சிக்கனம் காட்டி 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணியை 103/5 என்று திண்டாட விட்ட் நிலையில் 16வது ஓவரில் ரைலி மெரிடித்தும் 5 ரன்களையே விட்டுக்கொடுத்து ஜடேஜா விக்கெட்டைக் காலி செய்த நிலையில் 16 ஓவர் முடிவில் 108/6 என்று சிஎஸ்கே தோல்வி முகம் காட்டியது. 17வது ஓவரை உனாட்கட்டிடம் கொடுத்து, 18வது ஓவரை பும்ராவிடம் கொடுத்திருந்தால் ஒருவேளை தோனி அடித்திருக்க முடியாது. தினேஷ் கார்த்திக் அளவுக்கு ஸ்ட்ரோக் ரேஞ்ச் இல்லாத தோனி பினிஷ் செய்ய முடிகிறது என்றால் பவுலிங்கின் தரம் பற்றிய கேள்விதான் எழுகிறது. அதுவும் உனாட்கட்டை ரோஹித் எப்படி நம்பினார்.
அல்லது கடைசியில் டேனியல் சாம்ஸ் அல்லது ரைலி மெரிடித்திற்கு ஒரு ஓவரை மீதம் வைத்திருக்க வேண்டும், மொத்தத்தில் மோசமான கேப்டன்சியினால் இந்த தோல்வி என்றால் மிகையாகாது,
மற்றபடி இரு அணிகளும் படுமோசமான பீல்டிங் செய்து படுமோசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றால் அது மிகையல்ல, அந்த கடைசி ஓவர் த்ரில் தவிர மற்றபடி இந்த ஆட்டம் ஒரு அறுவை ஆட்டம், கிரிக்கெட்டின் எந்த ஒரு நுணுக்கமும் இல்லாத ஆட்டமாகவே அமைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Dhoni batting, IPL 2022, MS Dhoni, Mumbai Indians