முகப்பு /செய்தி /விளையாட்டு / சிஎஸ்கேவை வீழ்த்தியதை கோப்பையையே வென்றது போல் வெறித்தனம் காட்டிய கம்பீர்

சிஎஸ்கேவை வீழ்த்தியதை கோப்பையையே வென்றது போல் வெறித்தனம் காட்டிய கம்பீர்

கம்பீர் வெறித்தனம்

கம்பீர் வெறித்தனம்

சிஎஸ்கேவின் 210 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி கண்டதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் உலகையே வென்றது போல ரியாக்‌ஷன் காட்டியது நெட்டிசன்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சிஎஸ்கேவின் 210 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி கண்டதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் உலகையே வென்றது போல ரியாக்‌ஷன் காட்டியது நெட்டிசன்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

வெற்றி மகிழ்ச்சியில் கம்பீர் கத்தியது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த அளவுக்கு இந்த போட்டியை கம்பீர் முக்கியமானதாக கருதியிருக்கிறார். மேலும், கோயங்காவும் பார்வையாளர் மடத்தில் துல்லிக்குதித்த காட்சி ஜெயித்துவிட்டோம் என்பதையும் தாண்டி, கிரிக்கெட் வெற்றியையும் தாண்டிய ஒன்றாகவே தெரிந்தது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது, இதனையடுத்து ரசிகர்கள் பலர் ட்விட்டரில் பதிலளித்து வருகின்றனர்.

ரசிகர்கள் பகிர்ந்த ட்வீட்கள் இதோ:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட, ஷிவம் துபேயிடம் ஓவரைக் கொடுக்க அவர் ஒரே ஓவரில் 25 ரன்களை வாரி வழங்க அடுத்த ஓவரில் பதோனி, வெற்றி வாகை சூடினார். எவின் லூயிஸ் பின்னி எடுத்து விட்டார், கடைசியில் 3 பந்துகள் மீதமிருக்க லக்னோ சென்னைக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

First published:

Tags: CSK, Gautam Gambhir, IPL 2022, Lucknow Super Giants