Home /News /sports /

IPL 2022: மின்னல் வேக ஸ்டம்பிங்: தோனியை நினைவுபடுத்திய விக்கெட் கீப்பர் - அசந்து போன சச்சின்

IPL 2022: மின்னல் வேக ஸ்டம்பிங்: தோனியை நினைவுபடுத்திய விக்கெட் கீப்பர் - அசந்து போன சச்சின்

உத்தப்பாவை ஸ்டம்ப்டு செய்த ஷெல்டன் ஜாக்சன்

உத்தப்பாவை ஸ்டம்ப்டு செய்த ஷெல்டன் ஜாக்சன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் செய்த ஃபிளாஷ் ஸ்டம்பிங் அப்படியே அச்சு அசலாக தோனியை நினைவுபடுத்தியதாக சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸின் விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் செய்த ஃபிளாஷ் ஸ்டம்பிங் அப்படியே அச்சு அசலாக தோனியை நினைவுபடுத்தியதாக சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது, சிஎஸ்கே அணியில் ஆரம்பத்தில் உத்தப்பாவைத் தவிர யாருக்கும் பேட்டிங் வராதது போல் இருந்தது, தோனியும் செம தடவு தடவினார், ஆனால் கடைசியில் பனிப்பொழிவு வந்தவுடன் பவுலர்களுக்கு பந்து சோப்புக்கட்டியாக வழுக்க தோனி பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். ஃபுல்டாஸை அடிக்கவில்லை என்றால் அப்புறம் அவர் என்ன எம்.எஸ்.தோனி? விட்டு வாங்கினார்.

    இப்போட்டியின் போது கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சனின் கீப்பிங் திறமை குறித்து பெரிதும் பேசப்பட்டது. உத்தப்பாவை நல்ல பார்மில் இருந்த போதே அவரை ஸ்டம்பிங் செய்தது மேட்ச்சின் திருப்பு முனையாக அமைந்தது. தோனிக்கு அவர் செய்த ஸ்டம்பிங் முயற்சியும் அவருக்கான கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதை பற்றி அவர் பேசும்போது, "தொடக்கத்தில் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் அணியின் உரிமையாளர்களும், பயிற்சியாளர்களும், எனக்கு நல்ல உத்வேகத்தை அளித்தனர். எம்.எஸ். தோனிதான் எனக்கு முன்மாதிரி. அவரைபோல அடிக்கடி விளையாட நினைப்பேன். அவரை போல ஹெலிகாப்டர் ஷாட்களும் ஆட கற்றுக்கொண்டேன். அவரிடம் நான் கற்க வேண்டியவை நிறைய உள்ளன" என தெரிவித்தார்.

    ஷெல்டன் ஜாக்சனின் கீப்பிங் திறமையை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பாராட்டியுள்ளார். அவரின் வேகம் மின்னல் போல இருந்ததாகவும், அவரின் வேகம் தனக்கு எம்.எஸ்.தோனியை நினைவுபடுத்துவதாக தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022, KKR, Sachin tendulkar

    அடுத்த செய்தி