ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

CSK vs KKR-’என்டு கார்டு போட்டு எகத்தாளமா செஞ்சீங்க, எங்களுக்கு என்டே கிடையாது’- தோனி, ரஹானே அட்டகாசம்

CSK vs KKR-’என்டு கார்டு போட்டு எகத்தாளமா செஞ்சீங்க, எங்களுக்கு என்டே கிடையாது’- தோனி, ரஹானே அட்டகாசம்

கொல்கத்தா

கொல்கத்தா

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிஎஸ்கே அணியை ஊதியது. ஆனால் பழைய குதிரை என்று வர்ணிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தான் இன்னும் முடிந்து விடவில்லை, இன்னும் தன்னால் பினிஷிங் ஹிட்டிங் செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டுமொருமுறை நிரூபித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிஎஸ்கே அணியை ஊதியது. ஆனால் பழைய குதிரை என்று வர்ணிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தான் இன்னும் முடிந்து விடவில்லை, இன்னும் தன்னால் பினிஷிங் ஹிட்டிங் செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டுமொருமுறை நிரூபித்தார்.

உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 100 அடிப்பதே பெரிய விஷயமாக இருந்தது, ஆனால் ஒரு விதத்தில் தோனியை அடிக்கவிட்டனர் என்றே கூற வேண்டும். ஷிவம் மாவி, ஆந்த்ரே ரஸல் அதுவரை நன்றாக வீசிவிட்டு திடீரென புல்டாஸ் வீசுவது எப்படி என்றுதான் புரியவில்லை. கடைசி 3 ஓவர்களில் 47 ரன்களை ஜடேஜா, தோனி விளாசினர்.

தோனி முதல் 7 பந்துகளில் 1 ரன். பிறகு 13 பந்தில் 5 ரன்கள், ஆனால் அதன் பிறகு 25 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார் தோனி. அதில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸ்.

உமேஷ் யாதவ்வை ஆர்சிபியில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தது. பிரமாதமாக புதிய பந்தில் வீசி 4 ஓவர் 20 ரன் 2 விக்கெட் என்று அசத்தினார். ஜடேஜா, அம்பதி ராயுடு விக்கெட்டை கொல்கத்தாவுக்காக எடுத்துக் கொடுத்தார். அவுட் ஸ்விங்கரில் ருதுராஜ் கெய்க்வாடின் அனுபவமின்மை தெரிந்து எட்ஜ் ஆனார். பிறகு நியூசிலாந்தின் டெவன் கான்வே, சிஎஸ்கேவுக்கு ஒரு புதிய மைக் ஹஸ்ஸியாக இருப்பார் என்று பார்த்தால் அடிக்கப் போய் எளிதான கேட்ச் கொடுத்து உமேஷ் யாதவ்வின் அருமையான ஸ்பெல்லில் 2வது விக்கெட் ஆனார்.

பவர் ப்ளேயில் சிஎஸ்கே 35/2 என்று இருந்தது. பிறகும் ஓவருக்கு 6 ரன்கள் வரவேயில்லை. ராபின் உத்தப்பா பிரமாதமாக ஆடினார் அதுவும் உமேஷ் யாதவ்வை அடித்த பிளிக் சிக்ஸ் டாப் கிளாஸ். பிறகு கீப்பர் தலைக்கு மேல் ஒரு சிக்ஸ், மொத்தம் 2 பவுண்டரி 2 சிக்ஸ் என்று உத்தப்பா மட்டுமே பார்மில் இருப்பது போல் தெரிந்தது. 16 பந்து 23 ரன்னில் வருண் சக்ரவர்த்தியின் அருமையான பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். வருண், சுனில் நரைன் 8 ஒவர்களில் 38 ரன்களையே கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். நரைன் 4 ஓவர் 15 ரன் என்று முடக்கினார்.

8 ஓவர்கள் பவுண்டரியே வராத குறையை தோனிதான் போக்கினார். ஜடேஜா ராயுடு விக்கெட்டை எடுத்ததோடு அல்லாமல் ஷிவம் துபே விக்கெட்டையும் எடுத்திருப்பார், ஆனால் ஷிவம் துபேயும் நீடிக்கவில்லை, ரஸல் பந்து ஒன்று பிளாஸ்டிக் பந்து போல் எழும்ப் கொடியேற்றினார் துபே. அதன் பிறகுதான் 48 பந்துகள் பவுண்டரியே இல்லை. கடைசியில் வருணின் மிஸ் பீல்டில் தோனி ஒரு பவுண்டரி அடித்து வறட்சியை நீக்கினார்.

பனிப்பொழிவு விழ அதுவரை நன்றாக வீசிய ஷிவம் மாவி, ஆந்த்ரே ரஸல் பந்துகளின் யார்க்கர்கள் நழுவி புல்டாஸ்களாக இரண்டு சிக்சர் ஆனது. ஜடேஜா 27 பந்துகள் பவுண்டரியே அடிக்கவில்லை. கடைசியில் ஸ்லைஸ் செய்து சிக்ஸ் அடித்தார். 133 என்பது வெற்றிக்கான ஸ்கோர் அல்ல.

ரஹானே ரஹானேதான்...

சிஎஸ்கே பவுலர் துஷார் பாண்டே, மற்றும் ஆடம் மில்ன, இல்லாத ஸ்விங்கைத் தேடி ஃபுல் லெந்தில் வீசி 5 பவுண்டரிகளை இருவரும் வெங்கடேஷ் அய்யர், ரஹானேவுக்கு விட்டுக் கொடுத்தனர். ரஹானே தன் ஃபயர் பவரைக் காட்டுமாறு அதிவேக பந்து ஒன்றை மில்னே வீச அதை புல் ஷாட்டில் அற்புத சிக்ஸ் விளாசினார், இந்த ஐபிஎல் தொடரில் ரஹானே ஒரு சக்தியாகத் திகழ்வார் என்பதற்கான ஷாட் ஆகும் அது.

பிராவோ அற்புதமாக வீசினார், அவரை பேட்டிங்கிலும் கொஞ்சம் முன்னால் இறக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் ரன்கள் வந்திருக்கலாம் தோனி இறங்கிய டவுனில் பிராவோ இறங்கி ஆடியிருந்தால் தோனியின் 38 பந்து 50 என்பது பிராவோவின் 25 பந்து 50 ஆகியிருந்தால் மேட்ச் இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கலாம். ஆனால் பிராவோ பந்து வீச்சில் அசத்தினார், 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் கொல்கத்தா தோல்வியடையும் என்ற நிலை தோன்றவில்லை. ரஹானே 34 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸ் என்று 44 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களில் பிராவோவிடம் வீழ்ந்தார்.

நிதிஷ் ராணா இறங்கி சாண்ட்னரை ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்தும் சாம் பில்லிங்ஸ் 25 ரன்கள் எடுத்தும் பிராவோவிடம் வீழ்ந்தனர் .அய்யர் 20 நாட் அவுட். ஷெல்டன் ஜாக்சன் 3 நாட் அவுட் எளிதில் கொல்கத்தாவை கரை சேர்த்தனர். ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்.

First published:

Tags: Ajinkya Rahane, CSK, Dhoni, IPL 2022, KKR, Ravindra jadeja, Shreyas Iyer