Home /News /sports /

IPL 2022 KKR vs CSK - சச்சின், திராவிட் ஆகியோரை முறியடித்த தோனி

IPL 2022 KKR vs CSK - சச்சின், திராவிட் ஆகியோரை முறியடித்த தோனி

தோனி

தோனி

ஐபிஎல் 2022 முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அருமையான ஒரு அரைசதத்தை எடுத்தார், இதில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார் தோனி. இதில் சச்சின், திராவிட் சாதனையை முறியடித்தார்.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் 2022 முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அருமையான ஒரு அரைசதத்தை எடுத்தார், இதில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார் தோனி. இதில் சச்சின், திராவிட் சாதனையை முறியடித்தார்.

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கியது. 2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 7 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய தோனி, துவக்கத்தில் மிகவும் மந்தமாக ஆடினார். இருப்பினும் கடைசி கட்ட ஓவர்களில் தோனி அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த போட்டியில் தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே 47 ரன்களைக் குவித்தது. இதனால் மரியாதையான 133 ரன்களை எட்டியது, ஆனால் அது போதாது. ரகானே, அருமையாகத் தொடங்கி வெற்றியை உறுதி செய்தார்.

    நேற்று நடந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை டோனி (40 ஆண்டுகள் 262 நாட்கள் ) படைத்துள்ளார்.

    இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் (40 ஆண்டுகள் 116 நாட்கள் ) தன் வசம் வைத்து இருந்தார். இந்த சாதனையை 2013ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ராகுல் திராவிட் படைத்து இருந்தார்.

    அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் (39 ஆண்டுகள் 362 நாட்கள் ) இருந்தார். இந்த சாதனையை 2013ல் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் படைத்து இருந்தார்.

    இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் ராகுல் திராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனைகளை தோனி முறியடித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL 2022, KKR

    அடுத்த செய்தி