ஐபிஎல் 2022 தொடரின் நேற்றைய பகல் ஆட்டத்தில் குஜராத் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. ஆனால் எளிதாக வென்றதே தவிர விரைவில் வெல்லவில்லை. 134 ரன்கள் இலக்கை எல்லாம் 14-15 ஓவர்களில் அடித்துத் தூக்கி எறிந்திருக்க வேண்டாமா என்று அனைவருக்கும் கேள்வி எழுவது இயல்பு. 20வது ஓவரில் போய் இலக்கைக் கடந்து வெற்றி பெறுவதில் என்ன த்ரில் இருக்கிறது என்று பலரும் கேட்கலாம்.
இதற்குப் பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, சீக்கிரம் முடிச்சிருந்தா கூடுதல் பாயிண்ட்கள் கொடுப்பாங்களா, இல்லையே என்கிறார், ஆனால் நெட் ரன் ரேட் என்று ஒன்று உள்ளது, ஆனால் அதுவும் குஜராத்துக்குப் பொருந்தாது ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விட்டனர்.
இந்நிலையில் ஆட்ட முடிந்தவுடன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
முன்னாலேயே முடிச்சிருந்தா அதுக்காக எக்ஸ்ட்ரா புள்ளிகள் கொடுக்கப் போவதில்லை, எனவே வெற்றி பெறுவதுதான் முக்கியம். என் கேப்டன்சி பற்றி கூற வேண்டுமெனில் முன்னால் மும்பை இந்தியன்ஸில் ஆடும்போது ஏகப்பட்ட பொறுப்புகள் அளிப்பார்கள், எனக்கும் பொறுப்புகளை சுமப்பதென்றால் பிடிக்கும்.
எனவே கடந்த அணியில் பெற்ற அனுபவம் உதவியது. ஆஷிஷ் நெஹ்ராவின் மனநிலையும் என் மனநிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நாங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளாமலேயே பரஸ்பரம் புரிதல் உள்ளவர்கள்.
எந்த வீரருக்காவது ஓய்வு வேண்டுமா என்று பார்ப்போம் இல்லையெனில் அதே உத்வேகமான அணியையே பராமரிப்போம். அணியின் மையக்குழு இறுக்கமாக மாறாமல் இருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்றால் கொடுப்போம், இல்லையெனில் அதே வேகப்பந்து வீச்சு கூட்டணிதான்.
இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.